Header Ads



2 கைகளையும் கிருமித் தொற்று நீக்கும் தன்னியக்க இயந்திரம் - இராணுவத்தின் திறமைகளை பார்வையிட்டார் ஜனாதிபதி


இராணுவத்தின் ஆராய்ச்சி, பகுப்பாய்வு மற்றும் அபிவிருத்திப் பிரிவு உற்பத்தி செய்துள்ள, இரு கைகளையும் கிருமித் தொற்று நீக்கும் தன்னியக்க இயந்திரம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. ஜனாதிபதி அலுவலகத்தில், இன்று (06) முற்பகல் இந்த நிகழ்வு இடம்பெற்றது. 

இந்த இயந்திரத்தில், நான்கு லீற்றர் திரவத் தொற்று நீக்கியைக் களஞ்சியப்படுத்தி, 600 பேர்களின் இரு கைகளையும் கிருமித் தொற்றுநீக்க முடியும். இது, 48 மணித்தியாலம் தானாகச் செயற்படக்கூடிய இயலுமையைக் கொண்டுள்ளது. 

இறக்குமதி செய்வதற்கு நிகராக, குறைந்த செலவில் இந்த இயந்திரத்தை நாட்டில் உற்பத்தி செய்ய முடியும். எனவே, கிடைக்கும் கொள்வனவு கட்டளைக்கு ஏற்ப இயந்திரங்களை உற்பத்தி செய்வதற்கும் இது பற்றிய அறிவை தேவையானவர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கும், இராணுவ ஆராய்ச்சிப் பிரிவு தயாராக உள்ளது. 

இராணுவத் தளபதியும் பாதுகாப்புப் பணிக்குழாம் பிரதானியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கே.பி.ஏகொடவெல மற்றும் பிரகேடியர் சுதத் உதயசேன ஆகியோர், இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2021.07.06

No comments

Powered by Blogger.