Header Ads



இணையவழி கற்றலில் ஈடுபடும் வசதியற்ற மாணவர்களுக்காக 2,096 மத்திய நிலையங்களை நிறுவ நடவடிக்கை


இணையவழி கற்றலில் ஈடுபடுவதற்கான வசதிகள் இல்லாத மாணவர்களுக்கு அவசியமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, நாடுமுழுவதும் 2,096 மத்திய நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்று (14) ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இணையத்தள வசதிகள் இல்லாத மாணவர்களுக்கு கற்றலில் ஈடுபடுவதில் பிரச்சினை உள்ளது.

இந்நிலையில், மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் உதவியுடன், நாடுமுழுவதும் 2,096 மத்திய நிலையங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

பாடசாலைகள், விகாரைகள், பொதுநோக்கு மண்டபங்கள் என்பன இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கான கணினி மற்றும் இணையத்தள வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இரண்டாயிரத்து தொன்னூற்றி ஆறு நிலையங்களை நிறுவுவதற்கு அரசாங்கம் பணமில்லை எனக்கூறும் போது உங்கள் சம்பளத்தால் அவற்றை நிறுவும் திட்டம் உங்களிடம் இருக்கின்றதா?

    ReplyDelete

Powered by Blogger.