Header Ads



ரிஷாட், ஹிஸ்புல்லாஹ், ரியாஜ் தொடர்பில் மேலதிக விசாரணை இடம்பெறாமை பற்றி கத்தோலிக்க பேச்சாளர் குழு கேள்வி - ஜனாதிபதிக்கு 19 பக்கங்கங்களில் கடிதம்


ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், தேசிய கத்தோலிக்க பேச்சாளர் குழு, ஜனாதிபதிக்கு 19 பக்கத்திலான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. 

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தலைமையிலான இந்தக் குழுவில், ஆறு ஆயர்கள் உட்பட 27 அருட்தந்தையர்களும் அங்கம் வகிக்கின்றனர். 

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டு, சுமார் 5 மாதங்கள் கடந்துள்ள நிலையில், அதன் பரிந்துரைகள் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து தங்களது கவலையை வெளிப்படுத்துவதாக தேசிய கத்தோலிக்க பேச்சாளர் குழு அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளது. 

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்டவர்கள் தொடர்பில், ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரை நடைமுறைப்படுத்தப்படாமை குறித்தும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரிஷாட் பதியூதீன், ரியாஜ் பதியூதீன், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்டவர்கள் தொடர்பில், மேலதிக விசாரணைகள் இடம்பெறாமை தொடர்பிலும் தேசிய கத்தோலிக்க பேச்சாளர் குழு கேள்வி எழுப்பியுள்ளது.

2 comments:

  1. Why you guys dont talk about previous killings all over the country???

    ReplyDelete
  2. பைத்தியம் முத்திப்போச்சி

    ReplyDelete

Powered by Blogger.