Header Ads



பள்ளிவாசல்களில் தொழுகைகளில் 100 பேர் மட்டுமே பங்கேற்கலாம்


(ஏ.ஆர்.ஏ.பரீல்)

பள்­ளி­வா­சல்­களில் ஜும்ஆ மற்றும் ஏனைய கூட்டுத் தொழு­கை­களில் 100 பேருக்கு மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட எண்­ணிக்­கை­யா­னோரே ஈடு­பட முடியும் எனவும் பள்­ளி­வா­சல்­களின் தொழு­கைக்­கான இடப்­ப­ரப்­பு­க­ளுக்கு ஏற்ப இவ் எண்­ணிக்கை வேறு­ப­டலாம் எனவும் சுகா­தார அமைச்சு அறி­வித்­துள்­ளது.

தொழு­கைக்­காக ஒன்று கூடு­வோரின் எண்­ணிக்கை 100 க்கு மேற்­ப­டக்­கூ­டா­தெ­னவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அதற்­கி­ணங்க பள்­ளி­வா­சல்­களில் அதி­கூ­டிய எண்­ணிக்­கை­யாக 100 பேரே தொழு­கையில் ஈடு­ப­டலாம் என வக்பு சபை அனைத்து பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­க­ளுக்கும் அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

இதே­வேளை பெருநாள் தொழு­கையில் ஈடு­ப­டக்­கூ­டி­ய­வர்கள் எண்­ணிக்கை மற்றும் வழி­காட்­டல்கள் ஓரிரு நாட்­களில் அறி­விக்­கப்­ப­டு­மெ­னவும் வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தெரி­வித்தார்.

சுகா­தார அமைச்சு தொழு­கையில் ஈடு­ப­டு­வோ­ருக்­கான கொவிட் 19 சுகா­தார வழி­காட்­டல்­க­ளையும் வழங்­கி­யுள்­ள­தா­கவும் அவர் கூறினார். சுகா­தார அமைச்சின் வழி­காட்­டல்­களின் படி பள்­ளி­வா­சல்­களில் தொழு­கையில் ஈடு­ப­டுவோர் ஒரு வரிசை இடை­வெ­ளி­யை­விட்டே தொழு­வ­தற்கு அனு­ம­திக்­கப்­ப­ட­வேண்டும். பள்­ளி­வா­சல்­களில் காற்று சீராக்­கிகள் (AC) உப­யோ­கப்­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டாது. அத்­தோடு பள்­ளி­வா­சல்­களின் யன்­னல்கள் திறந்து வைக்­கப்­பட்­டி­ருக்­க­வேண்டும்.

வீடு­க­ளிலே வுழு செய்­து­கொள்ள வேண்டும். முஸல்லாஹ் விரிப்பு கொண்டு வரப்­ப­ட­வேண்டும், முகக்­க­வசம் அணிய வேண்டும் எனும் வழி­காட்­டல்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

அத்­தோடு ஜும்ஆ தொழு­கை­யின்­போது குத்­பாவும், தொழு­கையும் 30 நிமிட நேரத்­துக்குள் நிறைவு செய்­யப்­ப­ட­வேண்­டு­மெ­னவும் நிபந்­தனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த நிபந்­த­னை­களை ஒவ்வோர் பள்­ளி­வா­சல்­களும் பின்­பற்ற வேண்­டு­மென வக்பு சபையின் தலைவர் பள்ளிவாசல் நிர்வாகங்களை கோரியுள்ளார்.

கொவிட் 19 தொற்றிலிருந்து சமூகத்தையும் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்காகவே இவ்வேற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.- Vidivelli

No comments

Powered by Blogger.