Header Ads



ஜனாதிபதியுடன் உள்ள மிகப்பெரிய எட்டப்பன் PB ஜயசுந்தர, விழ்ச்சிக்கு அவரே காரணம் - ஆனந்த தேரர்


நாரஹேன்பிட்டி அபயாராமய விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் இன்று -15- அரசாங்கத்திற்கு எச்சரிக்கையொன்றை விடுத்தார்.

மிக குறுகிய காலத்தில் மக்களின் வரவேற்பை இழந்த அரசாங்கம் கோட்டாபய ராஜபக்ஸவின் அரசாங்கம் தான் என தேரர் தெரிவித்தார்.

நாட்டில் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியே இருப்பதாகவும் ஜனாதிபதியின் அனுமதியின்றி  பிரதிநிதிகள் செயற்படுவார்களாயின், யாரிடம் இதனை முறையிடுவது என தேரர் கேள்வி எழுப்பினார்.

பிரதிநிதிகள் ஜனாதிபதியின் கண்ணில் மண்ணைத் தூவியுள்ளதாகவும், “நாம் மன்னர்” என நினைத்துக் கொண்டு எவரேனும் செயற்படுவதாக இருந்தால் அது அந்த தனிநபரின் தவறு அல்ல, நாட்டை நிர்வகிக்கும் அதிகாரிகளின் குறைபாடே அதற்கு காரணம் எனவும் தேரர் குறிப்பிட்டார்.

எந்தவொரு நபரையும் சுற்றி எட்டப்பன்மார் இருப்பார்கள். புரோகிதர்களும் இருப்பார்கள், புரோகிதர்கள் கூறினால் அதனையே பின்பற்றுவார்கள். இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இருக்கும் மிகப்பெரிய எட்டப்பனாக கலாநிதி ஜயசுந்தரவை காண்கின்றோம். ஜனாதிபதியின் இந்த விழ்ச்சிக்கு அவரே காரணம்

என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டார்.

P.B. ஜயசுந்தரவை பதவியில் இருந்து நீக்கி, அதனை வழிநடத்தக் கூடிய ஒருவரை நியமிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அவ்வாறு செய்யாவிட்டால் எதிர்காலத்தில் பாரிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை ஏற்பாடு செய்யப் போவதாகவும் அரசாங்கத்திற்கு தேரர் எச்சரிக்கை விடுத்தார்.

காலை முதல் இரவு வரை வீதியில் இறங்கி சத்தமிடுகின்றனர். உண்பதற்கு ஒன்றும் இல்லை. உரம் இல்லை. கடலாமைகள் போன்ற உயிரினங்கள் இறக்கின்றன. இந்த அனைத்து அவலக் குரலுக்கு மத்தியில், வாகனங்களை கொண்டுவர முயற்சிக்கின்றனர். மக்கள் மீது சுமையை சுமத்தி அவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ முயல்கின்றனர். சொகுசு வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டால் அது யாராகவும் இருக்கலாம், அவரது முடிவு அன்றிலிருந்தே ஆரம்பமாகும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்

என தேரர் மேலும் குறிப்பிட்டார்.

1 comment:

  1. முதலில்; பௌத்த தேரர்கள் அனைவரும் நாட்டில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் நிலைநிறுத்த ஒரே அணியில் நின்று செயற்பட வேண்டும். ஏனைய மதங்களை விடுங்கள். பௌத்த பிரானின் போதனைகளை எடுத்து நடக்க மக்களை அழையுங்கள். இன்னுமொரு மனிதனுக்குத் தீமை செய்யாதீர்கள். அவ்வாறு செய்வதற்கு சிங்கள பௌத்த மக்களைத் தூண்டுவதற்கு இடம் கொடுக்காதீர்கள். நீதியான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பாடுபடுங்கள். சிங்கள இனத்தின பெயரையும் பௌத்த தர்மத்தையும் சாட்டாக வைத்து நாட்டைக் கொள்ளையடிக்க அரசியல்வாதிகளுக்கு இடம் கொடுக்காதீர்கள். இன்னமும் எவ்வளவோ செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் இருக்கின்றன. இவற்றை முதலில் செய்வதற்கு பௌத்த குருமார்களையும் உண்மையான தேசபக்தர்களையும் கொண்ட அமைப்பினை நிறுவுங்கள். ஏன் ஏனைய மதங்களிலும் தமிழ் மொழியினைப் பேசுவோர்கள் மத்தியிலும் "தேச பக்தர்கள்" இல்லையா தேரர் அவரகளே!

    පළමු අවස්ථාවේ දී; රට තුළ සාමය හා සමගිය ඇති කිරීම සඳහා සියලුම බෞද්ධ පූජකවරු එක්ව කටයුතු කළ යුතුය. වෙනත් ආගම් අත්හරින්න. බෞද්ධ ප්‍ර rana ාවේ ඉගැන්වීම් රැගෙන ඇවිදීමට මිනිසුන්ට ආරාධනා කරන්න. වෙනත් මිනිසෙකුට හානියක් නොකරන්න. සිංහල බෞද්ධයින්ට එසේ කිරීමට ඉඩ නොදෙන්න. සාධාරණ රටක් ගොඩනැගීමට උත්සාහ කරන්න. සිංහල ජනවාර්ගික හා බුද්ධාගමේ නාමයෙන් රට කොල්ලකෑමට දේශපාලන politicians යන්ට ඉඩ නොදෙන්න. කළ යුතු ප්‍රතිසංස්කරණ රාශියක් තවමත් තිබේ. පළමුව මේ දේවල් කිරීමට නම්, බෞද්ධ පූජකයන් හා සැබෑ දේශප්‍රේමීන් සමඟ සංවිධානයක් පිහිටුවන්න. වෙනත් ආගම් සහ දෙමළ කථිකයන් අතර “ජාතික බැතිමතුන්” නොසිටින්නේ ඇයි?

    ReplyDelete

Powered by Blogger.