Header Ads



இன்னும் சில மாதங்களில் நாட்டில், உணவு பற்றாக்குறை ஏற்படும் - கபிர் ஹாசீம் Mp


உணவு களங்சியப்படுத்தலைப் பாதுகாப்பதாக தெரிவித்து ஆட்சிபீடமேறிய அரசாங்கம், இரசாயன உர இறக்குமதியை முறையற்ற விதத்தில் நிறுத்தியுள்ளதென தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபிர் ஹாசீம், இதனால் இன்னும் சில மாதங்களில் நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படும் என்றார்.

கொழும்பில் நேற்று (4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, மேற்கண்டவாறு தெரிவித்த அவர், உரத்தை நிறுத்தி உணவு களஞ்சியப்படுத்தலை இந்த அரசாங்கம் காட்டிக்​கொடுத்துவிட்டது என்றார்.

“உணவு மாத்திரமல்ல இதுவரை எரிபொருள் களஞ்சியப்படுத்தலை எரிபொருள் கூட்டுதாபனமே முகாமைத்துவம் செய்து வந்தது. ஆனால், இப்போது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்து எரிபொருள் களுங்சியப்படுத்தலிலும் நெருக்கடி, அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

சுகாதார பாதுகாப்பும் இல்லாமல் போயுள்ளது. மறுபுறம் நிதி முகாமைத்துவமும் சீரழிந்து இறுதியில் பங்களாதேஷிடம் கடன் வாங்கியுள்ளது எனத் தெரிவித்த அவர், இந்த அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாத நிலையில், இந்த அரசாங்கம் பதவி விலகுவதே சிறந்தது என்றார்.

2 comments:

  1. உணவுப்பஞ்சத்துக்கு உங்களிடம் தீர்வு இருக்கின்றதா, அதை பொதுமக்களிடம் முன்வையுங்கள்,அது தவிர பிரச்சினைகளை மாத்திரம் கிளிப்பிள்ளை போல திருப்பித்திருப்பிக்கூறி பொது மக்களை மனநோயாளர்களாக மாற்றாதீர்கள்.

    ReplyDelete
  2. கபீர். இந்த முட்டாள்தனத்தை நிறுத்துங்கள். அரசியல் செய்வதற்கான உங்கள் ஏமாற்றும் வழி போதும். இன்னும் சில மாதங்களில் நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படும் என்றறு அதை உங்கலாள் எப்படி கணிக்க முடியும்?
    ( “Ar-Razzaq” அல்லாஹ்வைப் பற்றி "அர்-ரஸாக்" வழங்குநராக உங்களுக்குத் தெரியுமா?அல்லாஹ் புனித குர்ஆனில் இவ்வாறு கூறினார்: நிச்சயமாக, அல்லாஹ் எல்லாவற்றையும் வழங்குபவன், அதிகாரத்தின் உரிமையாளன், மிகவும் வலிமையானவன். [குர்ஆன், 51:58]. அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த படைப்பாளியும் உண்டா? அவரைத் தவிர வேறு கடவுள் இல்லை. அப்படியானால், நீங்கள் (அவரிடமிருந்து) எப்படி விலகிச் செல்கிறீர்கள். [குர்ஆன், 35: 3]. இது யதார்த்தம். அரசியல் லாபங்களுக்காக, முஸ்லிம்களையோ மக்களையோ ஏமாற்ற வேண்டாம். உங்கள் முட்டாள்தனத்தால் முஸ்லிம்கள் சோர்ந்து போகிறார்கள். உங்கள் உறவுகளுக்கு நெடுஞ்சாலை ஒப்பந்தங்களை(contracts) வழங்குவதில் நீங்கள் ஊழலில் ஈடுபட்டுள்ளீர்கள் என்று விரல்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
    அரசாங்கத்தின் பதவிக் காலத்தின் எஞ்சிய காலத்திற்கு அரசாங்கம் தங்கள் சேவைகளைச் செய்யட்டும். தயவுசெய்து ஒரு நல்ல முஸ்லீமாக முதலில் உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள், இன்ஷா அல்லாஹ். நான் இதை உங்களுக்கு எதிராக எழுதவில்லை, ஆனால், அனைவருக்கும் மற்றும் உங்களுடைய நன்மைக்காக, இன்ஷா அல்லாஹ்.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.