Header Ads



மாணவர்கள் வீடுகளில் அடைபட்டு, துரித உணவுகளை சாப்பிடு, ஒரே இடத்திலிருந்து கற்பதால், நீரிழிவு நோய்க்கு உள்ளாகும் அபாயம் - Dr தீபால்


இலங்கையில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக சிறுவர் நோய் சிகிச்சை நிபுணத்துவ மருத்துவர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பதிவாகும் நீரிழிவு நோய் பாதிப்புக்கு உள்ளான சிறார்களில் அதிகளவானோருக்கு இன்சுலின் ஏற்றப்பட வேண்டிய அவசியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சுமார் 120 சிறார்கள் நீரிழிவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை செல்லும் சிறார்கள் தற்பொழுது வீடுகளில் அடைந்து கிடப்பதனால், பௌதீக செயற்பாடுகள் எதிலும் ஈடுபடுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிகளவான சிறார்கள் துரித உணவு வகைகளை அதிகளவில் உட்கொள்வதனால் அதிகளவில் இவ்வாறு நீரிழிவு நோய்க்கு உள்ளாகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இணைய வழி தொலைகல்வி காரணமாக மாணவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து கற்க நேரிட்டுள்ளதாகவும் மன அழுத்தம் ஏற்படுவதாகவும் இவ்வாறான ஏதுக்களினால் நீரிழிவு பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் அதிகம் எனவும் நிபுணத்துவ மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.