Header Ads



இலங்கையில் கொரோனா உள்ளான குழந்தைகளுக்கு புதியவகை நோய் - மோசமான நிலை என்கிறார் Dr நளீன்


கொவிட் 19 வைரஸ் தொற்றுடன் குழந்தைகள் மிகவும் அவதானமான நிலைக்கு உட்பட்டுள்ளதாக விஷேட வைத்தியர் நளின் கிதுல்வத்த தெரிவித்துள்ளார். 

கொவிட் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி 2 - 6 வாரங்களுக்குப் பிறகு குழந்தைகளுக்கு புதிய நோய் ஒன்றுக்கு வருவதாகவும் அவர் கூறினார். 

குழந்தைகளுக்கு அறியாமலேயே இந்த நோய்க்கு ஆளாகின்றமை என்பது ஒரு மோசமான நிலை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதுவரையில் 8 முதல் 15 வயதிற்கு உட்பட்ட 6 குழந்தைகள் இந்த நோய்க்கு உட்பட்டு கொழும்பு ரிஜ்வே வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

காய்ச்சல், கடுமையான உடல் வலிகள், வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் கண்கள் சிவத்தல் ஆகியன இந்த நோயின் முக்கிய அறிகுறிகள் என்பதுடன் இது இதயத்தை பாதித்து குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக குழந்தை உயிரிழக்க நேரிடுவது இதன் ஆபத்தான நிலை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இது 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட ஒரு புதிய நோய் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.