Header Ads



இலங்கையில் கொரோனா மரண, அதிகரிப்பு குறித்து ஆராய்ந்தவேளை புலனாகிய விடயம்


உடனடி மருத்துவ சிகிச்சையை பெறத்தவறியதன்  காரணமாகவே பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின்  ஆலோசகர் பட்டுவான் துடாவ தெரிவித்துள்ளார்.

சமீபத்திய கொரோனா மரணங்கள் குறித்து ஆராய்ந்தவேளை இது புலனாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

வைரசினால் ஏற்படும் மோசமான பாதிப்புகள் 80 வீதமான நோயாளிகளில் வெளிப்படாது 20 வீதமான நோயாளிகளிலேயே வெளிப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் மோசமாக பாதிக்கப்படக்கூடியவர்களை அடையாளம் காண்பது அவசியம் இல்லாவிட்டால் அவர்களை குணப்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லாமல்போய்விடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நோய் அறிகுறிகள் தென்படுவதாக எவராவது கருதினால் அவர்களை உடனடி மருத்துவ கிசிச்சையை பெற்றுக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். Thinakkural

No comments

Powered by Blogger.