Header Ads



பயணக் கட்டுப்பாட்டினால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்வர் என்பதை அறிவோம், மக்களின் உயிரையும் மதிக்கிறோம் - பிரதமர்


தொற்று நிலைமையாக இருப்பினும், அனர்த்த நிலைமையாயினும் எந்த சூழ்நிலைகளிலும் மக்களுடன் அந்த சவாலை ஏற்றுக்கொள்ள ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நாம் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (07) அலரி மாளிகையில் வைத்து தெரிவித்தார்.

பயணத்தடையின் போது மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என அறிந்த போதிலும் ஒரு உயிரின் மதிப்பறிந்து அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிக்குமாறு இதன்போது பிரதமர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

புதிய களனி பாலம் முதல் அத்துருகிரிய வரையான 16.4 கிலோமீற்றர் நீளமான அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கெடம்பே, கொஹுவல, கொம்பனித்தெருவில் நீதிபதி அக்பர் மாவத்தை மற்றும் உத்தரானந்த மாவத்தை, பாலதக்ஷ மாவத்தை மற்றும் சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை ஆகிய இடங்களில் நிர்மாணிக்கப்படும் 06 மேம்பாலங்களின் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இருந்தவாறு குறித்த வேலைத்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு கௌர பிரதமரின் தலைமையில் காணொளி தொழில்நுட்பம் ஊடாக இடம்பெற்றது. அங்கு பிரதமர் ஆற்றிய முழுiமையான உரை வருமாறு,



No comments

Powered by Blogger.