Header Ads



ஐஸ் போதைப் பொருள் பக்கட்டை வாயில் போட்டு விழுங்கி, அது நெஞ்சுப் பகுதியில் வெடித்ததில், நுரையீரல் பாதிக்கப்பட்டு மரணம்


(க-சரவணன்)

மட்டக்களப்பில் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்ட இளைஞன் 4 ஐஸ் போதைப் பொருள் பக்கட்டை வாயில் போட்டு விழுங்கியதன் காரணமாக உயிரிழந்துள்ளார் என பிரேதப் பரிசோதனை தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனா்.

மட்டக்களப்பில் 25 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலைய கூட்டில் அடைத்து வைக்கப்பட்ட இளைஞன் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (04) அதிகாலையில் இடம்பெற்றது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞன் பொலிசாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலத்தை நீதவான் பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்ட்டார். அதேவேளை வாழைச்சேனை பொலிஸ் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த தலைமையில் விசேட பொலிஸ் குழு அமைக்கப்பட்டு விசாணை இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் இன்று (03) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேதப் பரிசோதனை யில் குறித்த நபர் 4 பக்கட்டுகளைக் கொண்ட ஐஸ் போதைப் பொருளை வாயில் போட்டு விழுங்கிய நிலையில் அது நெஞ்சுப் பகுதியில் வெடித்ததில் நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

1 comment:

  1. ​பொலிஸ் அறிக்ைகயும் மரணமும், மருத்துவ அறிக்கையும் ஒன்றாக இருக்கும் போது பொதுமக்களுக்கு பாரிய சந்தேகம் ஏற்படுகின்றது. இந்த சந்தேகததை அகற்றும் பாரிய பொறுப்பு நீதித்துறைக்கு இருக்கின்றது.

    ReplyDelete

Powered by Blogger.