Header Ads



கப்பல் தீப்பற்றிய விவகாரம், ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்குமாறு கோரிக்கை


எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்பன குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிக்குமாறு அகில இலங்கை துறைமுக பொது சேவையாளர்கள் சங்கம் கோரியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இது தொடர்பில் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பிரதான செயலாளர் தெரிவித்தார்.

இதேவேளை கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்த 300 டொன் இரசாயனம் இதுவரையில் கரையொதுங்கியுள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளது.

இதற்கிடையில் தீப்பற்றிய எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல், இலங்கை கடற்பகுதிக்குள் பிரவேசித்த விதம் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் நீதி மையம், அதன் நிறைவேற்று பணிப்பாளர் ஹேமந்த விதானகே மற்றும் கடற்றொழிலாளர்கள் சிலரும் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக நீதிமன்றத்திற்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த மனுக்களின் பிரதிவாதிகளாக இலங்கை துறைமுக அதிகாரசபை, கடல் மாசுப்பாடு தடுப்பு அதிகாரசபை, மத்திய சுற்றாடல் அதிகாரசபை, கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் துறைமுக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன உள்ளிட்ட பெயர்கள் உள்ளக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.