Header Ads



வசதிகள் கிடைக்காத வழிபாட்டு தலங்களுக்கு பிரதமர் தலைமையில் புண்ணிய வசதிகள்


கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் புண்ணிய வசதிகள் கிடைக்காத விகாரைகள் மற்றும் பிற வழிபாட்டு தலங்களுக்கு குறியீட்டு ரீதியில் நன்கொடை பொதிகளை வழங்கும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (03) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது.

பயணத்தடை காரணமாக புண்ணிய வசதிகள் கிடைக்காத விகாரைகள் மற்றும் பிற வழிபாட்டு தலங்களுக்கு  புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரின் ஆலோசனையின் பேரில் இவ்வாறு புண்ணிய வசதிகள் வழங்கும் செயற்பாடு செயற்படுத்தப்பட்டுள்ளது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் செயற்படுத்தப்படும் இவ்வேலைத்திட்டத்தின் ஊடாக புண்ணிய வசதிகள் கிடைக்காத விகாரைகள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு 'சதொச' நிறுவனத்தின் ஆதரவுடன் உலருணவு பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கப்படுகின்றன.

இவ்வேலைத்திட்டத்தின் கீழ் அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கௌரவ பிரதமரினால் நன்கொடை பொதிகள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

அதற்கமைய கொலொன்னாவே சுகதவங்ஷ தேரர், வடகெதர விமலபுத்தி தேரர், அருட்தந்தை.லின்தொடகே பிரஷான் டிலந்த பெர்னாண்டோ, வேகந்த ஜும்ஆ பள்ளிவாசலின் நஸீர் மௌலவி, வெள்ளவத்தை சிவஸ்ரீ வீ.சோமசுந்தர குருக்கள்; ஆகியோர் கௌரவ பிரதமரின் கரங்களினால் நன்கொடை பொதிகளை பெற்றுக்கொண்டனர்

பிரதமர் ஊடக பிரிவு

1 comment:

  1. பாவமன்னிப்பு கிடைக்கும் என்ற பேராசை

    ReplyDelete

Powered by Blogger.