Header Ads



முதல் சம்பவத்திலேயே ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது


- ரெக்ஸ் கிளெமன்டைன் -

இங்கிலாந்து இலங்கை அணிகளிற்கு இடையிலான மூன்று ஒரு நாள் போட்டிகளில் முதலாவது போட்டி ஆரம்பமாகவுள்ள நிலையில் விசாரணைக்காக மூன்று வீரர்களை நாடு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளதை  இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்று தொடர் மோசமான  நிலையிலிருந்து மிக மோசமான நிலைக்கு செல்கின்றது.

துணைத்தலைவர் குசல்மென்டில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஸ்க குணதில விக்கெட்காப்பாளர் நிரோசன் திக்வெல ஆகியோரை டேர்கமில் நள்ளிரவில் வீதிகளில் காணப்பட்டது வீடியோவில் பதிவாகியுள்ளது.

கட்டுப்பாடுகளை புறக்கணித்து வீரர்கள் வெளியில் செல்வது,ஹோட்டலில் இருந்து நள்ளிரவில் வெளியேறுவது பொது இடங்களில் சிகரெட் பிடிப்பது கிரிக்கெட் உலகிற்கு புதிய விடயமல்ல.

இலங்கை அணியின் தலைசிறந்த வீரர்கள் சிலரே எல்லையை மீறியுள்ளனர்.

ஆனால் இங்கு நடந்த தவறு என்னவென்றால் மூன்று வீரர்களும் பயோ பபிளை புறக்கணித்துள்ளனர்.

இதன் மூலம் சக வீரர்களை பயிற்றுவிப்பாளர்கள் உட்பட ஏனையவர்களிற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

சமீபநாட்களில் டேர்ஹமில் அதிகளவு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால்- இந்த மீறல்கள் இங்கிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கு கடும் ஏமாற்றத்தை அளிக்கப்போகின்றன.

கொரோனா வைரஸ் பரவலிற்கு பின்னர் பயோபபிள் முறையை அறிமுகப்படுத்தியதே  இங்கிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாடடுச்சபையே என்பது குறிப்பிடத்தக்கது.

 தற்போது குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள மூன்று வீரர்களும் ஏற்கனவே விதிமுறைமீறல்கள் நடத்தை மீறல்களிற்காக தண்டிக்கப்பட்டவர்கள் எச்சரிக்கப்பட்டவர்கள்.

பாணந்துறையில் கடந்த வருடம் இடம்பெற்ற விபத்தில் 64 வயது நபர் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து மென்டிஸ் கைதுசெய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

அவரை ஒழுக்காற்று நடவடிக்கைகளிற்கு இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை உட்படுத்தவில்லை மாறாக அது தனிப்பட்ட விடயம் என பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஸ்லி டி சில்வா தெரிவித்தார்.

அதற்கு ஒரு வருடத்தின் பின்னர் குசல்மென்டிஸ் அணியின் உபதலைவராக  நியமிக்கப்பட்டார்.

குமார் சங்கக்காரவிடமிருந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விக்கெட் காப்பாளர் பொறுப்பு நீக்கப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட சிறந்த முடிவு என இதனை தெரிவிக்கலாம்.

எனினும் அவர் நான்கு இனிங்ஸ்களில் ஓட்டங்களை பெறாதநிலையில் துணை தலைவர் பதவி வழங்கப்பட்டதால் மென்டிஸ் ஒருபோதும் பாடம் கற்கப்போவதில்லை.

பலகல்லேயில் ஒருநாள் போட்டிக்கு முன்னர் மதுஅருந்திவிட்டு  வந்தார் தனுஸ்க குணதிலக,அணிமுகாமையாளர்கள் அறிவித்ததை தொடர்ந்து அவர் இடைநிறுத்தப்பட்டார்.

எனினும் பாக்கிஸ்தான் செல்வதற்கு போதிய வீரர்கள் இல்லாததால் திலங்க சுமதிபால அவரை அணியில் சேர்த்துக்கொண்டார்.

 அடுத்தவருடம் இன்னொரு ஹோட்டல் சம்பவத்தில் தனுஸ்க குணதிலகவிற்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.எனினும் பயிற்றுவிப்பாளர் சண்டிக ஹதுருசிங்க அவரை காப்பாற்றியதால் அவர் தண்டனையிலிருந்து தப்பினார்.

ஆகவே  இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை ஒழுக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை,ஆகவே எவ்வேளையிலும் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறலாம்  என்ற நிலை காணப்பட்டது.

முதல் சம்பவத்திலேயே வீரர்கள் ஒழுக்காற்று நடவடிக்கைகளிற்கு உட்படுத்தப்பட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

1 comment:

  1. Totally country leader to until below officers totally corrupted group

    ReplyDelete

Powered by Blogger.