June 26, 2021

முஸ்லிம் சட்ட சீர்திருத்தக் குழுவுக்கு அவகாசம் வழங்காது அநீதி - அலி சப்ரியிடம் கவலை தெரிவிப்பு, கடிதமும் ஒப்படைப்பு


முஸ்லிம் சட்ட சீர்திருத்தக் குழு (2021.06.21) முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டம் தொடர்பாக, அதனது அறிக்கையை  நீதியமைச்சர் அலி சப்ரி அவர்களிடம் ஒப்படைத்து. 

இக்குழுவிற்கு  முஸ்லிம்களின் பல மார்க்க விவகாரங்கள் தொடர்பில் அவர்களின் ஆலோசனையை முன்வைக்கும்படி அமைச்சர் மூலம் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதில் முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டம்,  வக்ஃப் சட்டம், அல் குர்ஆன் மற்றும் அரபு மத்ரஸாக்கள் தொடர்பான சட்டம், ஹஜ் தொடர்பான சட்டமூலம் ஒன்றை உருவாக்குவது பற்றிய முன்மொழிவுகள் போன்றன உள்ளடக்கப்பட்டிருந்தது. 

இதில் பிரதானமானதாக முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டம் காணப்படுகின்றது. இதன் முன்மொழிவுகள் தொடர்பில் அமைச்சரவை (கெபினட்) அமைச்சர்கள் மூலம் சில தீர்மானங்கள் ஏலவே எடுக்கப்பட்டிருந்தது. இவ்வமைச்சர்களின் தீர்மானங்களாக, திருமணத்தின் குறைந்த வயதெல்லை 18 ஆக இருத்தல், திருமணத்தின் போது பெண்ணின் சம்மதம் மற்றும் கையொப்பம் அவசியம், பலதார திருமணம் ரத்து செய்யப்படல், காதி நீதிமன்றங்களிலன்றி பொதுவான ஒரு நீதிமன்றத்தில் சட்டங்களை செயற்படுத்தல் போன்றன அமைந்திருந்தன. 

எனவே, முஸ்லிம் சட்ட சீர்திருத்த குழுவிற்கு அவ்விவகாரங்கள் தொடர்பில் எந்த கருத்தும் அல்லது முன்மொழிவும் வழங்குவதற்கான அவகாசம் வழங்கப்படவில்லை. ஆனாலும் இக்குழுவில் உள்ள உலமாக்களாகிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் அர்கம் நூராமித், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்-ஷைக் ஏ.பீ.எம். அஷ்ரப் மற்றும் அஷ்-ஷைக் முஈஸ் புகாரி ஆகியோர் இவை தொடர்பிலான, குறிப்பாக திருமண வயதெல்லை, பலதார திருமணம் மற்றும் காதி நீதிமன்றங்களை இரத்து செய்தல் பற்றிய தங்களின் கவலையையும் நிலைப்பாட்டையும் தெரிவித்ததோடு அதற்கான மாற்று தீர்வுகளை வழங்குமாறு வேண்டி தனிப்பட்ட முறையில் அமைச்சருக்கு ஒரு கடிதத்தையும் வழங்கியுள்ளனர்.

4 கருத்துரைகள்:

"Qunooth-un-nazila ஓதினா எல்லாம் கிளியர் ஆகிடும்.அல்லாஹ்வ பயந்து கொள்ளுங்க அல்லாஹ்வின் நல்லடியார்களே!பொருமைய கடப்பிடிங்க சகோதரர்களே"னு ஒரு அறிக்கைய போடுங்க முப்தி

The Minister of Justice has FAILED Miserably to protect the religious rights of the Muslims in Sri Lanka. His WORST failure was in relation to the Burial Rights of Covid-19 victims for almost one year.


Even in this matter, there is ONLY One place in the Entire country where Burial can be done and that is in the East. How difficult and problematic this is for the grieving family members living in the South, West, North West and other parts of the country? Is it so difficult for him to alleviate the Immense Suffering of the Muslims by getting one or more places in each District for Burial of Covid 19 victims?

After all, he is a Lawyer and experienced enough to win Cases for Clients. Why not use his Expertise to take up the Just Causes of his Fellow Muslims so that they can continue to enjoy their Religious Rights which they have been having for Decades and Centuries?

The law of Allah is supreme.

முஸ்லிம் அ(நீதி) அமைச்சரை வைத்திக்கொண்டே, அவருடைய கைகளினாலே எமது உரிமைகள் பரிக்கப்படுகின்றன, கவளைக்குறியவிடயம் நீதியைப்படித்த அந்த அமைச்சராலேயே அதைப் புரிந்துகெள்ளமுடியவில்லை காரணம் பதவி, பட்டம், கேளரவம்.... அமைச்சரே புரிந்துகொள்ளங்கள் எமது வரலாறு எப்படியென்றால் துரிக்கித் தொப்பி அனிந்துகொண்டு நீதிமண்றத்தில் விவாதிப்பதற்குக் கூட அனுமதியைப் பெற்றுத்தந்திருக்கிறார்கள். அவர்களுடைய பெயர்கள் எப்படி வரலாற்றில் பதியப்பட்டுள்ளனவொ, அதேபோன்று உங்களது பெயரும் எதிர்கால வரலாற்றுல் நிச்சயமாக பதியப்படும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்பது எமது நிலைப்பாடு.

Post a Comment