Header Ads



பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டாம்


உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டாம் என வாழ்க்கைச் செலவு குழு, நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் வாழ்க்கைச் செலவு குழு நேற்று (09) மாலை கூடியதாக வர்த்தக அமைச்சர், கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலையை அதிகரிக்குமாறு நேற்று நுகர்வோர் விவகார அதிகார சபை கோரிக்கை விடுத்திருந்தது.

எனினும், இவ்வாறான சூழ்நிலையில் பொருட்களின் விலைகளை அதிகரிக்காது மாற்று வழிகளை கையாளுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவித்ததாக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. முதலில் அரசு பொருள்களின் விலைகளைக் குறைத்து அவற்றை விநியோகத்தர்களுக்கு வழங்கட்டும். அதன் பின்னர் அரசே விற்கப்படும் விலைகளைக் கணகாணிக்கட்டும். ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் பாராளுமன்ற உணவகத்திலும் ஐந்து வேளைகளும் உணவருந்துபவர்களுக்கு தற்போது நாட்டு மக்கள் உட்பட சிறுவரகள் குழந்தைகள் உணவினைப் எவ்வாறு பெற்றுக் கொள்கின்றார்கள் என்பது பற்றி விவரிக்கத் தேவையில்லை. இந்த நாட்களில் பணக்காரர்கள் உட்பட அனைத்து மக்களும் உணவுப் பொருள்களைப் பெறுவதில் மிக மிகச் சிரமப்படுகின்றார்கள். அறிக்கைகளை சகட்டுமேனிக்கு விடாமல் உடனடியாகக் களமிறங்கி ஆகNவண்டியதைப் பாருங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.