Header Ads



சீனாவின் குப்பைகள் இலங்கையில் கொட்டப்படாது, அரசாங்கத்திற்கு களங்கம் கற்பிக்க வதந்திகளை பரப்புகிறார்கள்


சீனாவின் குப்பைகள் இலங்கையில் கொட்டுவதற்கு இடமளிக்கப்படாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் -01-  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.

சீனாவின் கழிவுகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு இங்கு கொட்டப்பட உள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மையா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

சீனாவிலிருந்து குப்பைகளை இலங்கை இறக்குமதி செய்வதாக வெளியாகும் தகவல் நகைப்பிற்குரியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில ஊடக நிறுவனங்கள் திட்டமிட்ட வகையில் அரசாங்கத்திற்கு களங்கம் கற்பிக்கும் வகையில் வதந்திகளை பரப்பி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

2 comments:

  1. அரசாங்கம் ஏற்கனவே ஓர்கனிக் பர்டிலைஸர் இறக்குமதி செய்ய ஒரு விசேட கமிட்டியை நியமித்துள்ளது. இந்த கமிட்டி அல்லது அந்த கமிட்டி சார்ந்த கமிசன்காரர்களின் திட்டப்படி பெருமளவு தொகை பணத்தை சீனாவிடமிருந்து பெற்றுக்ெகாண்டு சீன நகர்களின் கழிவுப் பொருட்களுக்கு யூரியா கலவைகளை விசிரி ஓர்கனிக் என்ற பெயரில் அந்தக் கழிவுகள் மீண்டும் எங்கள் விவசாயிகளைச் சென்றடைந்து ஏற்கனவே சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு புற்றுநோயைச் சரியாக ஏற்படுத்தும் வகையில் அந்த அசுத்தங்களும் கழிவுகளும் அவர்களுக்கு ' பெரும்சேவை' வழங்க காத்திருக்கின்றது.

    ReplyDelete
  2. குப்பை சீனாவில் இருந்து வரவில்லை இலங்கையில் உள்ள இனவெறி ஆட்சியாளர்களால் ஏற்கனவே உருவாக்க பட்டுள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.