Header Ads



இறுதி நேரத்தில் ஊடகவியலாளர் மாநாட்டை, ரத்துச்செய்த சாகர காரியவசம்


சட்டத்தரணி சாகர காரியவசம் இன்று (14) அமைச்சர் காமினி லொக்குகேவுடன் இணைந்து பொதுஜன பெரமுனவின் பிரதான அலுவலகத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்துவதாக முன்னர் அறிவித்திருந்த போதிலும், தவிர்க்க முடியாத காரணத்தினால் ஊடக சந்திப்பு இரத்து செய்யப்படுவதாக பின்னர் அறிவித்தார்.

கம்மன்பிலவின் கருத்திற்கு எதிர்வரும் நாட்களில் பதிலளிப்பதாகவும், அழுத்தம் காரணமாக ஊடக சந்திப்பு இரத்து செய்யப்படவில்லை எனவும் பொதுஜன பெரமுனவின் செயலாளர் நியமன பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம் கூறினார்.

வாழ்க்கைச் செலவு தொடர்பான குழுவில் எரிபொருள் விலையேற்றத்திற்கான பல முக்கிய காரணங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு நேற்று அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்தது.

ஜனாதிபதி தலைமையில் பிரதமர் மற்றும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர்கள், வாழ்க்கைச் செலவுக் கூட்டத்தில் கலந்துகொண்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எரிபொருள் விலையேற்றம், உள்நாட்டுப் பொருளாதாரத்தை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தின் ஓர் முக்கிய நடவடிக்கை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

No comments

Powered by Blogger.