Header Ads



டெல்டா கொரோனா நாட்டில் இனங்காணப்பட்டுள்ள சூழ்நிலையில், மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்


பயணத்தடை நீக்கப்படும் நிலையில் பொறுப்புடன் நடந்துகொள்வது முக்கியம் என அரசாங்க மருத்துவர்கள் சங்கம் நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.  பயணத்தடை தளர்த்தப்பட்டாலும் அத்தியாவசிய காரணங்களுக்காகவன்றி வீட்டிலிருந்து வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் மக்கள் பொறுப்புடன் செயற்பட்டால் மாத்திரமே எதிர்காலத்தில் நாட்டை முழுமையாக திறக்க முடியும் என்றும் அந்த சங்கம் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

மிக வேகமாகப் பரவக்கூடியதும் ஆபத்தானதும் மரணங்களை அதிகரிக்கக் கூடியதுமான இந்திய டெல்டா திரிபு கொரோனா வைரஸ் நாட்டில் இனங்காணப்பட்டுள்ள சூழ்நிலையில் மேற்படி சங்கம் நாட்டு மக்களை பொறுப்புடன் செயல்படுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

அரசாங்க மருத்துவர்கள் சங்கத்தின் நிறைவேற்று செயலாளர் டாக்டர் பிரசாத் கொலம்பகே நேற்றைய தினம் ஊடகங்களுக்கு அது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்:

சில வாரங்கள் நாட்டை முடக்கியதாலேயே வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்துள்ளது. அதற்கிணங்க நாட்டில் பயணத் தடை தளர்த்தப்படும் நிலையில் மக்கள் செயற்படும் விதத்தை வைத்தே அதன் பிரதிபலனை எதிர்வரும் இரண்டு வார காலங்களில் கணிப்பிட முடியும்.

நம் ஆரம்பக்கட்டத்தில் நாட்டில் தினமும் ஒரு மரணம் தொடர்பிலேயே பேசினோம். பின்னர் அது ஒரு தினத்திற்கு இரண்டு மூன்று என்று அதிகரித்து பிறகு பத்து பதினைந்து என மாறியது. தற்போது அது 50ற்கும் அதிகமாகியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் மக்கள் பொறுப்புடன் செயற்படா விட்டால் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட மரணங்களை சந்திக்க நேரும். அவ்வாறு ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சில வாரங்கள் நாட்டை மூடி வைத்திருந்ததால் ஏற்பட்ட பாதிப்பை கருத்திற்கொண்டே தற்போது பயணத்தடை தளர்த்தப்படுகின்றது.அதனை கருத்திற் கொண்டு மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments

Powered by Blogger.