June 18, 2021

ரணில் ஒரு துரோகி, தன்னை காப்பாற்ற என்னை பலிக்கடாவாக்கி, இலங்கையிலிருந்து வெளியேறச் சொன்னபோது ஏமாற்றமடைந்தேன் - மௌலானா


17 வருடங்களுக்கு முன்னர் எனது கட்சித் தலைவர் எனது உயிரை பணயம் வைக்கும் நிலையை ஏற்படுத்தினார்.  எனக்கு துரோகமிழைத்தார்.

தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக  என்னை பலிக்கடாவாக்கினார். அதன் பின்னர் நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஷாஹிர் மௌலானா  டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நான் வெறுமனே அவரது உத்தரவுகளை மாத்திரம் பின்பற்றினேன்.நாட்டிற்கு நல்லது என நினைத்ததை மாத்திரம் செய்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது;

அந்த நாள் ஜூன் 22, 2004 

நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து 17 வருடங்களின் பின்னர் தேர்தலில் தோல்வியடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்  நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க வுள்ளார்.

அவரது பெயர் ரணில் விக்கிரமசிங்க. 

எனக்கு துரோகமிழைத்த கட்சித் தலைவர் தொடர்ந்தும் நாட்டிற்கு துரோகமிழைக்கின்றார்.

கருணா தப்பிச்செல்வதற்கு நானே காரணம் என  பிரபாகரன் அறிந்ததைத் தொடர்ந்து சீற்றமடைந்த அவர் தனது அரசியல் பிரிவினை செய்தியாளர் மாநாட்டை நடத்துமாறும்  எனக்கு அதில் தொடர்பிருப்பதை அறிவிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

ஜூன் 20 ஆம் திகதி அது நடந்தது.

மறுநாள் எனது கட்சித் தலைவரிடமிருந்து அவசர தொலைபேசி அழைப்புகள் வந்தன. தனது அலுவலகத்திற்கு என்னை வருமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மங்கள சமரவீரவும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்களும் செய்தியாளர் மாநாட்டினை நடத்தி தங்கள் குறுகிய அரசியலை முன்னெடுத்த வண்ணமிருந்தனர்.

எனது நடவடிக்கைக்கு எனது கட்சியே காரணம் எனத் தெரிவித்து சமாதானப் பேச்சுக்களை குழப்ப நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என  அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்சித் தலைவர் மிகவும் சீற்றத்துடன் காணப்பட்டார். நான் மிகவும் அமைதியாக உங்கள் உத்தரவின் பேரிலேயே செயற்பட்டேன் எனத் தெரிவித்தேன்.

நாங்கள் தற்போது அரசாங்கத்தில் இல்லை. நாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கின்றோம்- சமாதானப் பேச்சுவார்த்தைகள் முக்கியமில்லை என அவர் தெரிவித்தார்.

நான் அதிர்ச்சியடைந்து இவ்வாறு பதிலளித்தேன் - சேர் நீங்கள் கொழும்பில் இருந்தவாறு இதனை தெரிவிக்கலாம். நான் மக்கள் யுத்த பயத்தில் வாழும் பகுதியை பிரதிநிதித்துவம் செய்கின்றேன். நீங்கள் தான் இது நல்ல நடவடிக்கை எனத் தெரிவித் தீர்கள் என்றேன்.

நான் தற்போது கட்சியைப் பற்றி சிந்திக்க வேண்டும். நான் மிகவும் அவமானகரமான  சூழலில் இருக்கின்றேன். நீங்கள் பதவி விலக வேண்டும் என அவர் தெரிவித்தார்.

நான அந்தச் சந்திப்பிலிருந்து ஏமாற்றத்துடன் வெளியேறி னேன்.

எனக்கு இராணுவ புலனாய்வுப் பிரிவினரிடமிருந்து தகவல்கள் கிடைத்தன. எனது பாதுகாப்பு ஆபத்திற்குள்ளாகியுள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.

என்னை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

3 கருத்துரைகள்:

Kettle calls Teapot Black

Kettle calls Teapot Black

Mr. Ali Zahir Mowlana

True, you did a great favour to the country by facilitating the defection of Karuna 17 years back, in 2004 RISKING your Life and also your Family. It is not just Ranil W. who has forgotten it. The whole country has Forgotten it. Would the War have been won, the way it was, in 2009, if NOT for Karuna's Defection?

How valuable would have been the information about the LTTE secret locations, arms caches, fighter strengths etc. that Karuna would have provided to the Army when the Forces launched the attack to liberate the East in July 2006? In just about a year, in July 2007, the East was freed from the LTTE. Would this have been even imaginable without the intelligence provided by Karuna?

Would it have been possible for the Govt. to launch its Offensive in the North later in 2007, if the East was NOT liberated before that?

Not only Ranil W, but the majority community itself has forgotten the Karuna factor in winning the War. Even Karuna himself has forgotten that he owes his life to you because if he did not defect through your help, Prabha would certainly have finished him off. To this UNGTATEFUL Karuna, Muslims have become his worst enemies.

Post a Comment