Header Ads



ஒரு ஆசனத்தை வைத்து ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆக முடியும் - வஜிர அபேவர்தன


ரணில் விக்ரமசிங்க ஒரே ஒரு ஆசனத்தை வைத்து பிரதமர் மற்றும் ஜனாதிபதியாக ஆகக் கூடிய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இதனை தெரிவித்திருப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசியல் விஞ்ஞானத்துக்கு அமைய ரணில் விக்கிரமசிங்க தனது அரசியல் திறமையை கொண்டு ஒரு ஆசனத்தின் ஊடாக பிரதமர் மற்றும் ஜனாதிபதி பதவியில் கூட அமர வாய்ப்பு உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

40 ஆசனங்களைக் கொண்டு பிரதமரான ரணில் விக்ரமசிங்கவிற்கு அரசியல் விஞ்ஞானத்தின் படி ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆக முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.