Header Ads



கொரோனாவை தடுப்பதற்கான மஸ்ஜித்களை மையப்படுத்தி, உலமாக்கள் மூலம் விழிப்புணர்வு செயற்திட்டம்


நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொவிட்-19 மூன்றாவது அலையின் பரவலை தடுக்க நாடு தழுவிய பாரிய முயற்சி நடைபெற்று வருவதை நாம் அறிவோம். குறிப்பாக முஸ்லிம் சமூகத்தில் கொவிட் ஜனாஸாக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் இதுபற்றி முஸ்லிம் சமூகம் மிகவும் அவதானத்துடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டியுள்ளது.

அந்த வகையில் சுகாதார மேம்பாட்டு பணியகம், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இணைந்து ஜம்இய்யாவின் கிளைகளினூடாக மஸ்ஜித்களை மையப்படுத்தி கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான விழிப்புணர்வு செயற்திட்டம் ஒன்றை முன்னெடுக்க உத்தேசித்துள்ளன.

இச்செயற்திட்டத்தின் அறிமுக நிகழ்வு நேற்று (2021.06.01 ஆம் திகதி) செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை Zoom ஊடாக நடைபெற்றது. இதில் சிறுநீரக விஷேட வைத்தியர் சகோதரர் வாஸில் அவர்கள் பொது சுகாதார மேம்பாடு தொடர்பாக உரையாற்றியதோடு, ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் அர்கம் நூராமித் அவர்களும், உதவித் தலைவர்களில் ஒருவரான அஷ்-ஷைக் எச்.உமர்தீன் அவர்களும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்-ஷைக் ஏ.பீ.எம். அஷ்ரப் ஆகியோர் வழிகாட்டல்களை வழங்கினர்.

இதில், ஜம்இய்யா சார்பில் பொருளாளர் அஷ்ஷைக் ஏ.எல்.எம். கலீல் அவர்களும், பிரச்சாரக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் கே.எம். முக்ஸித் அஹமத் அவர்களும் கலந்துகொண்டதோடு ஜம்இய்யாவின் மாவட்ட/பிரதேசக் கிளைகளின் தலைவர்கள், செயலாளர்கள்கள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

1 comment:

  1. எப்ப முடிவெடுத்து முடியும்

    ReplyDelete

Powered by Blogger.