Header Ads



எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் கசிவு, கட்டாரில் தெரியவந்தது - இந்தியா சென்றபின், இலங்கைக்கு வந்தோம்


கட்டாரின் துறைமுகமொன்றில் கப்பல் காணப்பட்டவேளை கொள்கலன் ஒன்றில் கசிவு காணப்படுவது குறித்து தெரியவந்தது என எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலை இயக்கிய எக்ஸ்பிரஸ் பீடர்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி, ஸ்மல் யாட்ஸ்கவிட்ஸ் தெரிவித்துள்ளார்.

கப்பலில் மாலுமிகளிற்கு நைட்ரிக் அசிட் கசிவது குறித்து தெரிந்திருந்தது என தெரிவித்துள்ள அவர்,  குறிப்பிட்ட கொள்கலன்களை இறக்குவதற்கு இந்திய கட்டார் அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்

சனல்நியுஸ் ஏசியாவிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கப்பல் பயணித்த பாதை குறித்து தெளிவுபடுத்தியுள்ள அவர், கொள்கலன்கள் பத்தாம் திகதி துபாயின் ஜெபல் அலி துறைமுகத்தில் ஏற்றப்பட்டன என குறிப்பிட்டுள்ளார்.

கட்டாரின் ஹமாட் துறைமுகத்திற்கு அருகில் கப்பல் காணப்பட்டவேளை கசிவு குறித்து தெரியவந்தது நாங்கள் குறிப்பிட்ட கொள்கலன்களை இறக்க அனுமதி கேட்டோம், ஆனால் தங்களிடம் அதற்காக ஆளணி இல்லாததால் அவர்கள் அனுமதிவழங்கவில்லை என  குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் கப்பல் இந்தியாவில் உள்ள ஹசிரா துறைமுகத்திற்கு சென்றது, அங்கும் நாங்கள் குறிப்பிட்ட கொள்கலன்களை இறக்க அனுமதி கேட்டோம், அங்கும் இதே காரணத்தை தெரிவித்து நிராகரித்துவிட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் மே 19 ம் திகதி எக்பிரஸ் பேர்ள் இலங்கைக்கு வந்தது,அடுத்தநாள் காலை புகைவெளியாவது கண்டுபிடிக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுவரையில் ஒரு கொள்கலனில் இருந்து மாத்திரம் கசிவு காணப்பட்டது என தெரிவித்துள்ள அவர் தீ மூண்டமைக்கான காரணம் என்னவென்பதை மதிப்பிடுவது கடினம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஒரு கொள்கலனில் ஏற்பட்ட கசிவே காரணமாகயிருக்கலாம் என தெரிவித்துள்ள அவர் தனது நிறுவனத்தினால் அதனை 100 வீதம் உறுதியாக தெரிவிக்க முடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். Thinakkural 


2 comments:

  1. இலங்கையை சதி விளையாடி வருகிறது (குரோத ஆட்சிக்கு வித்திட்ட அயல் வீட்டவர்களே இலங்கையை இந்நிலைமைக்கு உள்ளாக்கி உள்ளனர்_ஹரீன் இன் சாபம் பிடிக்க ஆரம்பித்து விட்டது )

    ReplyDelete
  2. இந்த நபரை உடனடியாக கைது செய்து எமது நாட்டின் சகல துறைகளிலும் இதன் காரணமாக ஏற்பட்ட நஷ்டத்துக்கான ஈட்டுத் தொகையை முழுமையாக அறவிடும்வரை இந்த நபர் சிறையில் அடைக்கப்பட வேண்டும். அத்துடன் கடல்துறையில் நன்கு தேர்ச்சியான விஞ்ஞானிகளின் அழிவு பற்றிய இறுதிஅறிக்ைக பெறப்பட்டு சகல இழப்புகளுக்கான முழு நட்டஈட்டையும் பெற அரசாங்கம் நேர்மையாக உழைக்க வேண்டும். இல்லாவிட்டால் இதன் விளைவை முழுமையாக அரசு ஏற்க வேண்டியேற்படும்.

    ReplyDelete

Powered by Blogger.