Header Ads



கொரோனாவுக்கு மத்தியில் டெங்கும் பரவுகிறது


- Ismathul Rahuman -

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நீர்கொழும்பு, பெரியமுல்லை பிரதேசத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழை காலம் என்பதனால் டெங்கு நோய் மேலும் பரவும் சந்தர்பம் அதிகமென சுகாதாரப் துறையினர் தெரிவிக்கின்றனர். டெங்கு நோய் அறிகுறியில் பலர் நீர்கொழும்பு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவலின் அச்சுறுத்தலினால் சிலர் வைத்தியசாலைக்கு செல்ல அஞ்சுகின்றனர்.

நீர்கொழும்பு மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினர் கொவிட் 19 வைரஸ் தொடர்பான நடவடிக்கைகளிலும், தடுப்பூசி ஏற்றுவதிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ள தனால் டெங்கு நோய்யில் கவணம்செலுத்த முடியாத நிலைமையில் உள்ளனர்.

புகை விசுறுவதற்கோ, துப்பரவு செய்யும் பணியிலோ ஊழியர்களை ஈடுபடுத்தப்ப முடியாது உள்ளனர்.

கொறோனா அச்சுறுத்தல் நிழவும் இக்காலகட்டத்தில் பொதுமக்கள் தம் இருப்பிடங்களையும் சுற்றச் சூழலையும் சுத்தமாக வைத்து நீர்தேங்கி நிற்கக்கூடிய பொருட்களை அகற்றி டெங்கு பரவுவதை தடுக்க சுகாதாரத் துறையினருக்கு ஒத்துழைக்க வேண்டும்.

டெங்கு அறிகுறிகள் உள்ளவர்களும் வீடுகளிலேயே முடங்கிக்கிடக்காமல் உறிய வைத்தியர்களை நாடி சிகிச்சையை பெற்றுக்கொள்ள வேண்டும்.


No comments

Powered by Blogger.