June 07, 2021

ஜெய்லானி பள்ளி வளாகத்தில் பலவந்தமாக பௌத்த கொடி, வெசாக் கூடுகளால் அலங்கரிப்பு - தமக்கு தெரியாது என்கிறது பள்ளி நிர்வாகம்


(ஏ.ஆர்.ஏ.பரீல்)

சுமார் 1200 வரு­டங்கள் பழைமை வாய்ந்த பலாங்­கொடை – தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வாசல், பள்­ளி­வாசல் நுழை­வாயில், வளாகம், ஸியாரம் என்­பன கடந்த வெசக் பண்­டி­கையின் போது பௌத்த கொடி­க­ளாலும் வெசக் கூடு­க­ளாலும் பல­வந்­த­மாக அலங்­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அந்த அலங்­கா­ரங்­களும், வெசக் கூடு­களும் தொடர்ந்தும் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

பள்­ளி­வாசலில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த பச்சை நிற கொடிகள் கழற்றி அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. பள்­ளி­வா­சலில் பணி­யா­ளர்கள் இல்­லாத சந்­தர்ப்­பத்­தி­லேயே இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. நெல்­லி­கல வட்­ட­கும்­புற தம்மா ரதன தேரரின் வழி­காட்­டல்­களின் படியே பள்­ளி­வா­சலில் வெசக் அலங்­கா­ரங்கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் தற்­போ­தைய பள்­ளி­வாசல் நிர்­வாகம் ஏதும் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை எனவும், பள்­ளி­வாசல் தலைவர் உட்­பட நிர்­வா­கிகள் பலர் கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­டுள்­ளதால் பள்­ளி­வாசல் நிர்­வாகம் ஸ்தம்­பித நிலையை அடைந்­துள்­ள­தா­கவும் அப்­ப­குதி மக்கள் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்­தனர்.

இது தொடர்பில் பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின் தற்­போ­தைய தலைவர் எம்.எஸ்.எம்.நபீ­ஸிடம் ‘விடி­வெள்ளி’ வின­விய போது, ‘தனக்கு எதுவும் தெரி­யாது’ எனத் தெரி­வித்தார்.

பள்­ளி­வா­சலின் நிர்­வாக சபை முன்னாள் தலைவி ரொசானா அபு­சா­லியை விடி­வெள்ளி தொடர்பு கொண்டு வின­விய போது பள்­ளி­வாசல் அலங்­கா­ரங்­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­பதை உறுதி செய்­த­துடன் இது தொடர்பில் தற்­போ­தைய நிர்­வா­கமே இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் என்றார்.

தற்போதைய நிர்வாக சபை வக்பு சபையினால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். அதன் பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவு பெறுகிறது.- Vidivelli

3 கருத்துரைகள்:

இப்படி கிருஸ்தவ, இந்து ஆலயங்களில் செய்யமுடியாது.

இதை இப்படியே விட்டுங்கள், நாளை திடீரேன புத்தர் சிலை முளைத்துவிடும், அதற்குப்பிறகு பள்ளிவாசலுக்கு கோவிந்தா தான்

எல்லாம் ஒன்றுதான்

நல்லவர்களும் பிரச்சினையை விரும்பாதவர்களும் அமைதியாக இருக்கத்தான் செய்வார்கள். இவ்வாறு அடாவடித்தனம் செய்வதனால் ஏதோ முஸ்லிம்கள் மதம் மாறி பௌத்தத்திற்கு வநது விடலாம் என்று பௌத்த தீவிரவாதிகள் எண்ணுகின்றார்களோ என்னவோ தெரியாது. பௌத்த பாட நெறிகளிலும் பௌத்த தேவாலயங்களிலும் பௌத்த அறநெறிப் பாடசாலைகளிலும் காடைத்தனமும் தீவிரவாதமும் ரௌடித்தனமும் கற்பிற்கப்படுகின்றனவா என்பதனையிட்டும் புத்தபெருமான் இவற்றைத்தான் தன்னுடைய மதத்தில் புகுத்தினாரா என்பதுபற்றியும் அரசாங்கம் ஒரு குழுவினரை நியமித்து ஆராய்தல் மிக முக்கியமானது. மேற்குறிப்பிடப்பட்ட நெல்லிகல வட்டகும்புற தம்மா ரத்ன தேரரின் வழிகாட்டல்களின்படி இந்த அடாவடித்தனம் நடாத்தப்பட்டிருந்தால் நிச்சயமாக மேற்கூறப்பட்ட அத்தனை அடாவடித்தனங்களும் பௌத்த சமயத்தில் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. ஏனெனில் இந்த தேரர் மாத்திரமல்ல சகல தேரர்களுடன் பௌத்த அரசியல்வாதிகளும் திரும்பத் திரும்ப இதேவிதமான அடாவடித்தனங்களைச் செய்யுமாறு மக்களைத் தூண்டுவதிலிருந்தும் அவரகளே முன்னின்று செய்வதில் இருந்தும் அவ்வாறே எண்ணத் தோன்றுகின்றது. எப்படியிருந்தபோதிலும்' அரசு ஒரு விசாரணைக் குழுவினை அமைத்து பௌத்த மத குருமார்களும் பௌத்த அரசியல்வாதிகளுமே இத்தகைய அடாவடித்தனத;தில் ஈடுபடுவதனால்; அடாவடித்தனமும் ரௌடிததனமும் பௌத்த மதத்தின் ஒரு அம்சமா என்பது பற்றி விசாரணை செய்வது இன்றியமையாததாகும்..

හොඳ අය සහ ගැටලුවට අකමැති අය නිශ්ශබ්දව සිටිති. බෞද්ධ අන්තවාදීන් සිතන්නේ කුමක්දැයි මම නොදනිමි. මෙවැනි කුරිරුකම් මුස්ලිම්වරුන් බුද්ධාගමට හැරවීමට හේතු විය හැකිය. බෞද්ධ පාසල්, බෞද්ධ පල්ලි සහ ආචාර ධර්ම පාසල්වල ම්ලේච්ඡත්වය, අන්තවාදය සහ රළුබව උගන්වන්නේද යන්නත්, බුදුන් වහන්සේ විසින්ම තම ආගම තුළ මේවා ඉගැන්වූයේද යන්න සොයා බැලීමට කමිටුවක් පත් කිරීම රජයට වැදගත් වේ. ඉහත සඳහන් නෙල්ලිගල වට්ටකුම්බුර ධර්මා රත්න ථේරයාගේ මඟ පෙන්වීම යටතේ මෙම අපරාධය සිදු කර ඇත්නම්, නිසැකවම ඉහත සඳහන් කළ සියලු ම්ලේච්ඡයන් බෞද්ධ කාල පරිච්ඡේදයේදී සිදුවිය යුතුව තිබූ බව මගේ අදහසයි. මෙයට හේතුව මෙම න්‍යාය පමණක් නොව සියලුම බෞද්ධ දේශපාලන politicians යන් එකම ආකාරයකින් සිතන බවක් පෙනෙන්නට තිබීමයි. ඒ හා සමාන අපරාධ සිදුකිරීමට ජනතාව නැවත නැවතත් පොළඹවා ගැනීමෙන් හා තමන් විසින්ම ඉදිරියෙන් සිටියි. කෙසේ වෙතත්, මෙවැනි අපරාධවලට බෞද්ධ පූජකවරුන් සහ බෞද්ධ දේශපාලන politicians යින් සම්බන්ධ කර ගැනීම පිළිබඳව විමර්ශන කොමිසමක් රජය විසින් පිහිටුවා ඇත. කුරිරුකම් සහ වාචාල කතා බුද්ධාගමේ අංගයක් දැයි සොයා බැලීම අත්‍යවශ්‍ය වේ.

Post a Comment