Header Ads



இலங்கை வீரர்களை நேசித்த, ஒரு பேராசிரியரின் கோபம்


பெரும் செலவில் பாதுகாப்பாக இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்ட வீரர்களின் நடத்தை குறித்து தான் வருத்தப்படுவதாக இலங்கை கிரிக்கெட்டின் வைத்திய குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்து சுற்றில் கலந்து கொண்ட குசல் மெந்திஸ், நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலகவின் செயற்பாடுகள் தொடர்பில் அததெரண பிக் போகஸ் நிகழ்ச்சில் கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார். 

இவர்கள் தங்கும் இடத்தில் கால்வாய் ஒன்று உள்ளது. யாரும் இல்லாத போது காலையிலோ அல்லது மாலையிலோ கால்வாய் வழியாக நடந்து செல்லலாம். ஆனால் அந்த பாதையில் ஒரு பாலம் உள்ளது. அந்த பாலத்தின் பக்கம் செல்லக்கூடாது என தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. குறித்த பாலத்தைக் கடந்ததும், நகர மையத்தை அடையலாம். வீரர்களுக்கு வெளியே சென்று உடற்பயிற்சி செய்ய அல்லது ஏதாவது செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த காலத்தில், ஒரே ஒரு உடல் பயிற்சி நிபுணர் மட்டுமே இருந்தார். அணியில் எந்த வைத்தியரும் இருக்கவில்லை. இப்போது 24 மணி நேரமும் வைத்தியர் ஒருவர் உள்ளார். வைத்தியர் ஒருவர் இருக்கிறாரா என்று ஒருவர் என்னிடம் கேட்டார். வைத்தியருக்கு தெரியாது. ஏனென்றால், அவர்கள் இரவில் உறங்குகிறார்களா என்பதை பார்ப்பது வைத்தியரின் வேலை இல்லை. வௌியில் செல்ல முடியாது என்பது வீரர்களுக்கு தெளிவாக தெரியும். 

வீரர்களின் பாதுகாப்பிற்காக 69 மில்லியன் ரூபாய் செலவில் விசேட விமானத்தில் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்திய அணியினருக்கு முன்னதாகவே இவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அதுதான் எனக்கு கவலையும் கோபமுமாக உள்ளது. நான் ஒருபோதும் வீரர்களை விமர்சிப்பதில்லை. நான் வீரர்களை நேசிக்கிறேன். " என்றார்.


No comments

Powered by Blogger.