June 26, 2021

நான் கூறும் விடயங்களை புரிந்துகொள்ள நாட்டு மக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் சில காலம் செல்லும்


இலங்கையின் பொருளாதாரம் எதிர்காலத்தில் எதிர்நோக்கும் பிரதான சவால் குறித்து முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தான் கூறும் விடயங்களை புரிந்து கொள்ள நாட்டு மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சில காலம் செல்லும் எனவும் பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான அவர் கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

சீனாவுக்கு எதிராக உலகில் பல பிராந்தியங்களை சேர்ந்த நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள அணி இருக்கின்றது. இது குறித்து தற்போதைய அரசாங்கம் மாத்திரமல்ல, கடந்த அரசாங்கமும் மறந்து போனதன் பாரதூரமான பிரதிபலனை எதிர்காலத்தில் எதிர்நோக்க நேரிடும்.

எமது அண்டை நாடான இந்தியா, சீனாவுக்கு அருகில் உள்ள ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கிய நாளில் இருந்து சீனா சம்பந்தமான இலங்கை எச்சரிக்கை விடுத்து வந்தன.

மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைகளால் இலங்கை மிகப் பெரிய அழிவை சந்திக்கும் என்ற செய்தி அந்த எச்சரிக்கை ஊடாக வழங்கப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கி வரும் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை தற்காலிகமாக நீக்கவும் இலங்கைக்கு கிடைக்கும் பிரதிபலன்கள் தொடர்பாக மீளாய்வு ஐரோப்பிய ஆணைக்குழுவை கோரும் யோசனை ஒன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே அந்நாடுகள் விடுத்த எச்சரிக்கையை கவனத்தில் கொள்ளாததன் பிரதிபலனே இதற்கு காரணம் எனவும் விஜேதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

2 கருத்துரைகள்:

இலங்கையை சீனா ஆக்கிரமிப்பதை இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், உற்பட ஐரோப்பிய நாடுகள் எதுவும் ஏற்றுக் கொள்வதில்லை.அதனை அந்தந்த நாடுகள் தெரிவிக்கும் போது அவற்றைப் புரியும் அறிவோ அனுபவமோ ஆட்சியில் உள்ளவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அறவேகிடையாது. அதற்கு மேலாக கையில் போதுமானஅளவு பூசிவிட்டால், எதுவும் விளங்கமாட்டாது. உதாரணமாக லாப் கேஸ் கம்பனி இலங்கையில் ஆரம்பித்தபோது அதன் அரசுடனான உடன்படிக்கையின் பிரதியொன்றை வௌிநாட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றியபோது வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.இலங்கையையும் பொதுமக்களையும் பாதிக்கும் பிரதானமான சர்த்துகள் பற்றி அப்போதிருந்த இலங்கைத் தூதருடன் கலந்தாலோசித்தேன். அவர் அதைப் பெரிதாக ஏதும் எடுத்ததாக விளங்கவில்லை. பிறகுதான் கேள்விப்பட்டேன். அந்த உடன்படிக்கையில் இலங்கை சனாதிபதி கையொப்பமிட்டதற்குப் பதிலாக லண்டனில் இளவரசர்கள் வசிக்கும் மிகவும் பெறுமதியான பகுதியில் சனாதிபதிக்கு ஒரு மாளிகை வழங்கப்பட்டது. எனவே ஆட்சியாளர் தனது சுயநலத்துக்காக நாட்டையும் நாட்டு மக்களையும் அடகுவைக்கும் கலாசாரம் இலங்கைக்குப் புதிதல்ல. அது தொடர்ந்து வருகின்றது.

You claim that it will take time for people and politicians to understand what you say.

But the Politicians have understood you perfectly. That is why the SLPP leaders did NOT offer you any Cabinet post. Sure, you were highly surprised and disappointed. Now, you have no where to go as it is highly unlikely that the SJB or UNP will trust you again.

Recently, you went public with a statement that you protected the Rajapakses from Prosecution when you were the Minister of Justice in the last Yahapalana Govt. How do you expect any one to trust you with your Big Mouth?

Post a Comment