Header Ads



லூலூ யூசுப் அலியின் தயாளம், கிருஷ்ணன் உயிர் பிழைத்தார்....

அபுதாபியில் பணியாற்றி வந்த திருச்சூரை சார்ந்த  கிருஷ்ணன் என்பவர் அதி வேகமாக ஓட்டிவந்த கார் விபத்துக்குள்ளானதில் சாலையோரம் நின்றிருந்த  சிறுவன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்۔

அபுதாபி காவல்துறை கிருஷ்ணனை கைது செய்து சிசிடிவி காட்சிகள் ஆதாரங்கள் மூலம் விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு கிருஷ்ணனுக்கு மரணதண்டனை விதித்தது அபுதாபி நீதிமன்றம்۔

மரணமடைந்த சிறுவனின் பெற்றோர் சூடானை சேர்ந்தவர்கள்..

அரபுநாட்டு சட்டப்படி மரணமடைந்தவர் சார்பான நபர்கள் மன்னித்தால் மரணதண்டனை குறைக்கப்படுவதோ அல்லது நஷ்ட ஈடு கொடுத்து விடுதலை செய்யப்படுவதோ நடைமுறை..

சூடானை சேர்ந்த பெற்றோரிடம் கிருஷ்ணன் தரப்பில் பலரும்

பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும் அவர்கள் மன்னிக்க தயாராகாததோடு சூடானுக்கு கிளம்பி விட்டனர்..

மரண தண்டனைக்கான நாட்களை எதிர்பார்த்து கிருஷ்ணன் சிறையில் வாட, அவரின் உறவினர்கள் இறுதி நம்பிக்கையாக லூலு  யூசுப் அலியின் கவனத்துக்கு விஷயத்தை கொண்டு சென்றனர்..

யூசுப் அலி சூடானை சேர்ந்த சிறுவனின் பெற்றோருடன் தொடர்பு கொண்டு தொடர்ந்து பேசியதுடன் அவர்களை மீண்டும் தனது செலவில் அபுதாபி வரவழைத்து தங்க வைத்து கிருஷ்ணனின் குடும்ப சூழ்நிலை எடுத்துக் கூறி மன்னிப்பு வழங்க வேண்டுகோள் விடுத்தார்...

ஒரு கட்டத்தில் சிறுவனின் பெற்றோர் கிருஷ்ணன் ஐந்து லட்சம் திர்ஹம் நஷ்ட ஈடு வழங்கினால்  மன்னிப்பு வழங்க தயாராக இருப்பதாக தங்கள் முடிவை தெரிவித்தனர்..

சூடான் பெற்றோர் விதித்த நிபந்தனை தொகையை செலுத்தும் நிலையில் கிருஷ்ணன் குடும்பம் இல்லை என்பது தெரிந்த யூசுப் அலி 5லட்சம் திர்ஹம் (இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய்) இழப்பீடாக தானே தருவதற்கு சம்மதம் தெரிவித்தார்..

5 லட்சம் திர்ஹம் நீதிமன்றத்தில் தனது சொந்த பணத்தை செலுத்திய யூசுப் அலி கிருஷ்ணனை மரணத் தண்டனையிலிருந்து காப்பாற்றி உள்ளார்۔

கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக அபுதாபி சிறையிலிருக்கும்  கிருஷ்ணன் ஓரிரு தினங்களில் விடுதலையாக இருப்பது குடும்பத்தினர் கண்களில் ஆனந்த கண்ணீரை வரவழைத்துள்ளது..

கிருஷ்ணன் விடுதலையாகி வெளியே வருவதற்கு நீங்கள் செய்த உதவி தான் காரணம் என்று யூசுப் அலிக்கு குடும்பத்தினர் நன்றி தெரிவித்ததாக ஊடகத்தினர் கேட்ட போது யூசுப் அலி 

"இதற்கு நான் காரணமல்ல..

 எல்லாம் அல்லாஹ்வின் உதவியாலும், கருணையாலும் நடந்தது" என்று எளிமையாக கூறிவிட்டு கடந்து சென்றார்..

Colachel Azheem..

4 comments:

  1. This the mercy he learned from the teachings of Islam.

    Insha Allah he will be rewarded for this by Allah in this world and hereafter...

    ReplyDelete
  2. இந்த தாராளதன்மையும் பெருமனமும் அல்லாஹ்வை ஒரே இரட்சனகாவும் காப்பாற்றுவனாகவும் போஷிப்பவனாகவும் ஏற்றுக்கொண்டு வாழும் முஸ்லிம்களிடமிருந்து மாத்திரம் இது போன்ற கருணையும் தாராளமும், இறைநம்பிக்ைகயில் இருந்து ஏற்படுவது என்பதை இந்தச் செய்தியை வாசிக்கும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். யாஅல்லாஹ் கருணையும் தாராளமும் படைத்த எங்கள் யூசுப்அலி ஹாஜியாருக்கு தேவையுடையோருக்கு உதவி அல்லாஹ்வின் திருப்தியையும் கருணையையும் மென்மேலும் பெற்றுக் கொள்ள அருள்பாலிப்பாயாக.

    ReplyDelete
  3. google the name such as Yoosuf Ali, Lulu supermarket, then you will come to know who is he?

    ReplyDelete

Powered by Blogger.