Header Ads



எரிபொருள் விலையை குறைப்பது தொடர்பில் பேச்சு - நாமல்


எரிபொருள் விலையை குறைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார். 

´எரிபொருள் விலை தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை எடுப்பார்கள். விலை அதிகரிக்கப் படாவிட்டால் சிறந்தது என்றுதான் நாம் எதிர்ப்பார்கிறோம். எனினும் நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டு அதிகாரிகள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர். விரைவில் சிறந்த தீர்மானம் ஒன்று எடுக்கப்படும்´. என்றார். 


1 comment:

  1. பேச்சு இன்றியே விலை ஏறியது.

    ReplyDelete

Powered by Blogger.