Header Ads



அரசாங்கத்துடன் கோபத்தில் உள்ளவர்களை மகிழ்விக்க, எனது கொள்கையை மாற்ற முடியாது - ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,  நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை. (2021.06.25)

கடந்த காலத்தில் இடம்பெற்ற தவறுகளைச் சரி செய்துகொண்டு  முன்னோக்கிச் செல்வதற்கு, எமக்கு மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. சரியான திட்டத்தின் அடிப்படையில், உறுதியாகச் செயற்படுகின்ற போது மட்டுமே, நாம் சுபீட்சத்தை அடைந்துகொள்ள முடியும். இலங்கை வரலாற்றை எழுதுகின்ற போது, நாம் கடந்து சென்றுகொண்டிருக்கின்ற இக்காலப்பகுதி, எவ்வளவு கஷ்டமானது என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். என்றாலும், அந்த கஷ்டங்களுக்கு மத்தியிலும், நாம் வெற்றியோடு முன்னோக்கிச் செல்ல போகின்றோமா, இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு எமது கைகளிலேயே உள்ளது. 

நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முன்வந்த சந்தர்ப்பத்தில், நாட்டை முன்னிறுத்திய ஒரு தலைமையையே, எனக்கு ஆதரவளித்த பெருமளவானவர்கள் கோரினர். தனிப்பட்ட கோரிக்கைகள் எவையும், அவர்கள் என்னிடம் முன்வைக்கவில்லை. இருப்பினும், நான் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், சிலர் தமது தனிப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி, அரசாங்கத்துடன் கோபத்தில் உள்ளனர். அவர்கள் தற்போது அரசாங்கத்தை விமர்சிக்கிறார்கள். அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது என்ற கருத்தை மக்களிடம் கொண்டுசெல்ல முயற்சிக்கிறார்கள். எவ்வாறாயினுத், எனக்குத் தேவையான சிலரை மகிழ்விப்பதற்காக, எனது கொள்கையை மாற்றிக் கொள்ள முடியாது. நான் உறுதியளித்த வகையில், ‘சுபீட்சத்தின் நோக்கு’’ திட்டத்தை நடைமுறைப்படுத்துவதே எனது எதிர்பார்ப்பாகும். 

அன்று போலவே இன்றும் உங்களுக்குத் தலைமைத்துவத்தை வழங்க நான் தயாராக இருக்கிறேன். நான் எனது பொறுப்புகளைக் தட்டிக்கழிக்காது நிறைவேற்றுவேன். நாட்டை நேசிக்கின்ற, எதிர்காலத் தலைமுறைக்காக பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளத் தயாரான அறிவார்ந்த மக்கள், எனக்கும் எனது அரசாங்கத்துக்கும், எமது நோக்கங்களை அடைந்துகொள்வதற்காகத் தொடர்ந்தும் ஒத்துழைப்பார்கள் என்று நான் நம்புகிறேன். 

உங்கள் அனைவருக்கும் நல்வாழ்வு கிட்ட வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன். 

மும் மணிகளின் ஆசிகள்.  2021.06.25

No comments

Powered by Blogger.