Header Ads



இலங்கையில் அரசியல்வாதிகள், மருத்துவர்கள் மாறியுள்ளதாக ராஜித குற்றச்சாட்டு


இலங்கையில் தடுப்பூசி மருந்தளவை (Dose) அரசியல்வாதிகள் நிர்ணயிக்கும் நிலைமை உருவாகியுள்ளது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

இலங்கையில் நோயாளிகளே தங்களுக்குத் தேவையான மருந்துகள் பற்றி தீர்மானிக்கக்கூடிய நாடாக மாறியுள்ளது.

ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் இரண்டாம் மருந்தளவு தேவையில்லை என நோயாளிகளிடம் கையொப்பங்களை பெற்றுக்கொண்டது நீதியானதல்ல.

நோயாளிக்கான தடுப்பூசி மருந்தளவை நோயாளிகள் தீர்மானிக்க முடியாது - அதனை மருத்துவர்களே தீர்மானிக்க வேண்டும்.

எனினும் இலங்கையில் அரசியல்வாதிகளே நோயாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய தடுப்பூசி மருந்தளவினை தீர்மானிக்கும் நிலைமை உருவாகியுள்ளது.

இவ்வாறான நிலைமை நீடித்தால் எதிர்காலத்தில் மருத்தவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை நோயாளிகள் தங்களுக்கு ஏற்ற வகையில் எடுத்துக்கொள்ளக்கூடும்.

சீனாவிடமிருந்து தடுப்பூசி பெற்றுக் கொண்டபோது ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளது, பங்களாதேஷை விடவும் இலங்கை கூடுதல் தொகைக்கு தடுப்பூசிகளை கொள்வனவு செய்துள்ளது, அதனை நேரடியாக பங்களாதேஷ் வெளிப்படுத்தவில்லை.

தற்போது அரசியல்வாதிகள் - மருத்துவர்களாக மாறுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. இலங்கை இந்திய அரசியல் நல்ல இலாபம் தருகிறது தானே

    ReplyDelete

Powered by Blogger.