Header Ads



ஆட்சி செய்ய முடியாவிட்டால் தம்மிடம், ஒப்படைக்குமாறு ஐதேக அறிவிப்பு


நாட்டை ஆட்சி செய்ய முடியாவிட்டால் அதனை செய்ய முடிந்த தம்மிடம் ஒப்படைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

அக்கட்சியின்  பொதுச்செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார இதனைக் கூறியுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சேவையில் ஈடுபட்டுள்ள சுகாதார தரப்பினர் முன்வைத்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கத்தால் முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குவதை விடுத்து அதனை அத்தியாவசிய சேவையான அறித்து சர்வாதிகார போக்கில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

4 comments:

  1. நீங்க நல்ல திரமாத்தான் ஆட்சி பண்ணுவீங்க, ஓட்டுறவன் கேனநயன் என்றால் மாடு மச்சான் என்று சொல்லுமாம் அதுபோலத்தான் இருக்கு உன்குட கத, வெட்கம்,சூடு,சுரணைகள் மனிதர்களுக்கு கொஞ்சம் அவசியம்.

    ReplyDelete
  2. பேசாமல் நோர்வேயுடன் ஒப்பந்தம் செய்தால் காரியம் கைகூடும்.

    ReplyDelete
  3. Party discarded by people trying to flex its leftover muscles.

    ReplyDelete
  4. இப்படியும் ஒரு கனவா தலைவரே.

    ReplyDelete

Powered by Blogger.