Header Ads



பொதுஜன பெரமுன பங்காளிகளிடையில் முரண்பாடுகள், கூட்டணி பலவீனமடையும் - வாசு


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான  ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணிக்கும் அதன் பங்காளிக் கட்சிகளுக்கும் இடையில் கருத்து முரண்பாடு காணப்படுகிறது. முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பது அவசியமாகும். இல்லாவிடின்  கூட்டணி பலவீனமடையும் என  நீர் வழங்கல் துறை அமைச்சர்  வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 எரிபொருள் விலையினை அதிகரிக்கும் தீர்மானத்தை வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில  தன்னிச்சையாக எடுக்கவில்லை அதற்கான அதிகாரமும் அவருக்கு கிடையாது.  ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வாழ்க்கை செலவுகள் தொடர்பிலான அமைச்சரவை உப குழுவின் அனுமதியுடன் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

 எரிபொருள் விலையேற்றத்திற்கான பொறுப்பை  வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என   பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்ட கருத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவின்  8 பிரதான பங்காளிக் கட்சிகள் ஒன்றிணைந்து கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம்.

இவ்வாறான நிலையில்  வலு சக்தி அமைச்சர் உதயகம்மன்பிலவிற்கு எதிராக   ஐக்கிய மக்கள் சக்தியினர் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர உள்ளார்கள்.இந்த நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றி பெறாது என்பதை எதிர்க்கட்சியினர் நன்கு அறிவார்கள்.

 பொதுஜன பெரமுன தலைமையிலான  ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியின் பங்காளி கட்சிக்கும்,  பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றன. இதற்கு விரைவில் ஒரு தீர்வு பெற வேண்டும். இல்லாவிடின் கூட்டணி பலவீனமடையும் என்றார்.

(வீரகேசரி)

No comments

Powered by Blogger.