Header Ads



நூற்றாண்டு தாண்டி, தேசிய பாடசாலையாக மலரும் ஒலுவில் அல் ஹம்றா


1920 ம் ஆண்டு ஒலுவில் கிராமத்தில் நிறுவப்பட்ட இப்பாடசாலை நூற்றாண்டை கடந்த நிலையில் தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டமையினையிட்டு  ஒலுவில் வாழ் அல்ஹம்றாவின் சமூகம் ஆனந்தப் பெரிமிதமடைந்து கொண்டிரிக்கின்றது.

ஒலுவில் கிராமத்தைப் பொறுத்தவரை அல்ஹம்றா பாடசாலையே உயர் கல்வியை மாணவர்களுக்கு கற்பிக்கும் ஒரேயொரு பாடசாலையாகும்.

இப்பாடசாலையின் உயர்வில் தான் ஒலுவில் மக்களின் கல்வியை உயரிய நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என்பது அம்மக்களின் நீண்ட கால கனவு. 

இந்த வகையில் தேசிய பாடசாலை எனும் கிரீடத்தை ஒலுவில் கிராமத்தின் கல்வித்தாயான அல்ஹம்றா சுமந்து கொள்ளும் இவ்வேளை அப்பாடசாலையின் சமூகத்தின் ஓர் அங்கத்தவனாக இருந்து எனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

தேசிய பாடசாலை எனும் கௌரவம் இலகுவில் பெறக்கூடிய ஒன்றல்ல.

நூற்றாண்டு பயணத்தில் இப்பாடசாலை பெற்றுக் கொண்ட கல்விப் பெறுபேறுகள், சாதனைகள் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில்   மாணவர்கள் பெற்றுக் கொண்ட அடைவுகள் போன்ற பல அம்சங்கள் கவனத்திற்க்கொள்ளப்பட்டே தேசிய பாடசாலை எனும் மகுடம் சூட்டப்படுகிறது.

1974 ம் ஆண்டு மஹா வித்யாலயமாக தரம் உயர்த்தப்பெற்று இன்று வரை பல சாதனைகளுடன் பயணித்துக் கொண்டிருக்கிறது.

இச்சாதனையைப் பெறுவதற்காக அவ்வக்காலங்களில் பணியாற்றிய அதிபர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் , நலன் விரும்பிகள் போன்ற பலர் இதற்காக முயற்சி செய்ததன் பலனே இன்று இப்பாடசாலை தேசிய பாடசாலை எனும் மகுடத்தை சூட்டிக் கொள்கிறது எனலாம்.

கடந்த 10 வருட அல்ஹம்றாவின் கல்விச் செயற்பாட்டினை நோக்கும் போது  குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் சிறந்த முன்மாதிரியான பாடசாலை என்ற நற்பேறைப் பெற்று சகல துறைகளிலும் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது.

 இது   கல்வி சமூகத்தால் நிறம்பிய பெரிய கிராமங்களில் ஒலுவில் கிராமத்திற்கு சிறந்த கௌரவத்தை பெற்றுக் கொள்ள துணையாகியது என்றால் மிகையாகாது.

தற்போதைய நிலையில் ஒலுவில் கிராமத்தை சேர்ந்த யு.கே.அப்துர் ரஹீம் அவர்கள் அதிபராக பொறுப்பேற்று சிறந்த பணி செய்து கொண்டிருக்கிறார்.தேசிய பாடசாலை எனும் கருப்பொருளை கவனத்திற்கொண்டு உரிய தரப்பாருக்கு விடயங்களை எத்திவைத்து அதற்கான சகல விடயங்களையும் பூர்த்தி செய்து சிறப்பாக செயற்பட்டார்.

அல்லாஹ்வின் உதவியினால் சிறந்த தலைமைத்துவத்துடன் இப்பாடசாலை பயணிக்கும் இவ்வேளை அது தரம் உயர்த்தப்பட்டிருப்பது மட்டற்ற மகிழ்ச்சி.

இதற்கான முயற்சிகள் கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தின் போது அப்துர் ரஹீம் அதிபர் தலைமையாலான குழுவினர் பல முயற்சிகளை செய்திருந்த நிலையில் புதிய அரசாங்கத்தின் "பிரதேச செயலகப் பிரிவில்  தேசிய பாடசாலை அமைத்தல்" எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மேற்படி கோரிக்கை சாத்தியப் படுத்தப் பட்டுள்ளது.

இதனை முன்னிலைப் படுத்திய கல்வி அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட அமைச்சர் போன்ற பலர் முயற்சித்திருந்தமை குறிப்பிடத் தக்கது.

தேசிய பாடசாலை எனும் கருப்பொருளை சுமந்து ஒலுவில் கிராமத்தின் கல்விச் செயற்பாட்டினை  முன்னெடுக்க வுள்ள இப்பாடசாலை எதிர் காலத்தில் பல வெற்றிகரமான நிகழ்ச்சித் திட்டங்களுடன் பயணித்தல் அவசியமாகும்.

1. பாடசாலை சமூகத்தில் அங்கத்துவம் பெறும் பெற்றோர் , நலன் விரும்பிகள் மற்றும் பழைய மாணவர்கள் மத்தியில் புதிய எண்ணக் கருக்களை அறிமுகப் படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தல்.

2.பாடசாலையினை மாணவர்கள் முழுமையாக நம்பிக்கை கொண்டு கல்விச் செயற்பாடுகளை முன்னொடுக்க திட்டங்களை தீட்டி நடைமுறைப் படுத்தல்.

3.இலங்கையில் உள்ள தேசிய பாடசாலைகளுடன் பயணித்தல் என்ற கருப்பொருளைக் கொண்டு  இணைப்பாடவிதான செயற்பாடுகளில் அதிக ஈடுபாடுகளுடன் பயணிக்க திட்டமிடல்.

4.தலைநகரை மையமாகக் கொண்ட பழைய மாணவர்கள் கிளை ஒன்றினை ஏற்படுத்திக் கொள்ளல்.

குறிப்பிட்டு சொல்லக் கூடிய அரசியல் பின்புலமோ ,பணப்பலமோ இல்லாத எமது கிராமத்திற்கு தேசிய பாடசாலையாக அல் ஹம்றா தரம் பெற்றிரிப்பது மிகப் பெரிய சாதனையாக வே கருதப்படுகிறது 

கிழக்கு மாகாணத்தில் குறிப்பிட்ட சாதனைகளுடன் முன்னிலை வகிக்கும் எமது அல்ஹம்றா தேசிய மட்டத்தில் சிறப்புடன் பயணிக்க எல்லோரும் துணைநிற்றல் அவசியமாகும்.

எம்.எல்.பைசால் (காஷிபி)

No comments

Powered by Blogger.