Header Ads



பால்மா விலை அதிகரிக்கப்படுமா..?


அனைத்து அத்தியாவசிய பொருட்களினதும் விலைகளை அதிகரிக்குமாறு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களினால், கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேநேரம், ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலையை, 350 ரூபாவினால் அதிகரிக்குமாறு, பால்மா இறக்குமதியாளர்களின் ஒன்றியம், நிதி அமைச்சின் செயலாளரிடம், கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில், மாதாந்த பால்மா நுகர்வு, 7,500 முதல் 8,000 டன் வரையில் உள்ளது.

உலக சந்தையில் பால்மாக்களின் விலைகள் மற்றும் கப்பல் கட்டணம் என்பன அதிகரித்துள்ளமையால், பால்மா இறக்குமதிக்கு அதிக செலவு ஏற்படுவதாக பால்மா இறக்குமதியாளர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தற்போது கையிருப்பில் உள்ள பால்மாக்களின் அளவு, மேலும் 4 முதல் 6 வாரங்களுக்கு மாத்திரமே போதுமானதாகும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போதைய நிலைமை குறித்து விளக்கமளித்துள்ள பால்மா இறக்குமதியாளர்களின் ஒன்றியத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய, பால்மா ஒரு டன் 2,800 அமெரிக்க டொலர்களாக, அதாவது அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 186 ரூபாவாக இருந்த சந்தர்ப்பத்திலேயே தற்போதைய பால்மா விலை நிர்ணயிக்கப்பட்டது.

தற்போது அமெரிக்க டொலரின் பெறுமதி 203 ரூபாவாகவும், பால்மா ஒரு டன் 4,300 டொலராகவும் உள்ளது.

இந்த மாற்றம் 300 ரூபாவுக்கும் அதிகமாகும்.

ஒரு கிலோ பால்மாவை விற்பனை செய்யும் ஒவ்வொருவருக்கும் 300 ரூபா அளவில் நட்டம் ஏற்படுகிறது.

எனவே, விலையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும்.

நட்டத்தை சரிசெய்வதற்கான வழிமுறைகள் இல்லாதமையால், தற்போது, கொள்வனவுகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்களின் ஒன்றியத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.