Header Ads



துருக்கிய ஜனாதிபதியின் மொழிபெயர்ப்பாளாராக அழைத்து செல்லப்பட்ட யுவதியின் புகைப்படம் உலகளவில் பேசுபொருளாகியது


A W M Basir

துருக்கிய ஜனாதிபதி ரஜப் தய்யிப் அர்துகானுக்கும் அமெரிக்க ஜனாதிபதி  ஜோ பைடனுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த 15 ஆம் திகதி பெல்ஜியத்தின்  தலைநகர் பிரஸ்ஸல்ஸில் இடம்பெற்றது. நோட்டோ நாடுகளின் உச்சிமாநாட்டைத் தொடர்ந்து இச்சந்திப்பு  நடைபெற்றது. இந்த சந்திப்பின்  துருக்கிய ஜனாதிபதியின் மொழிபெயர்ப்பாளாராக அழைத்து சென்ற யுவதியுடன் புகைப்படம் உலகளவில் பேசுபொருளாகியுள்ளது. 

யார் அந்த யுவதி

அமெரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது துருக்கிய ஜனாதிபதியின் மொழிபெயர்ப்பாளராக அழைத்து செல்லப்பட்டவர் பாதிமா கோக்ஜி. 

தற்போது மலேசியாவுக்கான துருக்கியின் தூதுவர் மர்வா கோக்ஜியின் புதல்வி. சர்வதேச உறவுகளில் உயர்கல்வியை அமெரிக்காவில் தொடர்ந்து வருகிறார். 

மர்வா கோக்ஜி துருக்கியப் பாராளுமன்றத்தின் முதலாவது ஹிஜாப் அணிந்த பெண் பாராளுமன்ற உறுப்பினராவார். இஸ்லாமிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் ஹிஜாப் ஆடையை அணிந்ததற்காக கடந்த நூற்றாண்டின் 90 களில் துருக்கியப் பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். ஹிஜாப் அணிந்தமைக்காக அப்போதைய துருக்கி ஜனாதிபதி சுலைமான் டெமிரேல் அவரது துருக்கிய பிரஜா உரிமையை பறித்தார்.

எனினும் சர்வதேச பாராளுமன்ற ஒன்றியம் அவரது பாராளுமன்ற உறுப்புரிமையும் துருக்கிய பிரஜா உரிமையும் பறிக்கப்பட்டமை சட்டபூர்வமற்றது என அறிக்கை வெளியிட்டது. 

இதனைத் தொடர்ந்து கோக்ஜி அமெரிக்க செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டார்.  அர்துகானின் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி ஆட்சியில் இருக்கும் காலத்தில் அவர் தனது பிரஜா உரிமையை மீளப் பெற்றுக் கொண்டார். தற்போது மலேசியாவுக்கான துருக்கியின் தூதுவராக கடமையாற்றுகின்றார். 

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடனான சந்திப்பின் போது துருக்கிய ஜனாதிபதி ரஜப் தய்யிப் அர்துகான் பாதிமா கோக்ஜியை மொழிபெயர்ப்பாளராக தெரிவுசெய்தமை குறித்து பலரும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.