Header Ads



நாடு முழுக்க பயணத் தடைக்கு மத்தியில், பாராளுமன்ற கூட்டத்தொடரை நடத்த தீர்மானம்


நாடு முழுவதும் நடமாட்டத்தடை அமுலில் உள்ள போதிலும் தீர்மானிக்கப்பட்டவாறு எதிர்வரும் செவ்வாய்கிழமை நாடாளுமன்ற கூட்டத் தொடர் இடம்பெறும் என படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்தார்.

நாடாளுமன்ற அமர்வை நடத்தும் விடயம் குறித்து Hiru செய்தி பிரிவு வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் விவாதம் ஒத்திவைக்கப்பட்டமையினால் அன்றைய தினம் கூட்டத்தொடர் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை எதிர்வரும் 9,10, மற்றும் 11ஆகிய திகதிகளில் நாடாளுமன்ற கூட்டத் தொடரை நடத்துவது தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற செயற்குழு கூடவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் எதிர்வரும் திங்கட் கிழமை முற்பகல் 9.30 அளவில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது என மேலும் தெரிவித்தார்.

2 comments:

  1. அது மிகவும் நல்லது, அப்போது அந்த மந்தி(ரி)களுக்கான ஆடம்பரக்கார்களை இறக்குமதி செய்யும் விடயம், வௌிநாட்டு அமைச்சு, கபூர் கட்டடம் உற்பட மிக முக்கியமான நாட்டின் சொத்துக்களை 'அபிவிருத்தி செய்யும்' விடயங்களையும் துரிதமாக மேற்கொள்ளலாம்.

    ReplyDelete
  2. விடயங்ளைச் சாதிக்கும் வகையில் பொஹோட்டுவ பா.உ அங்கத்தவர்கள் மாத்திரம் சமூகமளிக்கும் வகையில் ஒரு ஏற்பாட்டைச் செய்தால் அனைத்து விடயங்களையும் அது இலகுவாக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.