Header Ads



ஈஸ்டர் குற்றவாளிகளை அரசாங்கம் பாதுகாக்கிறது, ஏமாற்றமடைந்தது மாத்திரமே மிகுதியானது - பேராயர் ரஞ்சித்


உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை  ஆணைக்குழுவின் அறிக்கையில் குற்றவாளிகளென பெயர் குறிப்பிடப்பட்டவர்களை அரசாங்கம் அரசியல் நோக்கிற்காக பாதுகாக்கிறது எனத் தெரிவித்த பேராயர் ரஞ்சித் மெல்கம்

, சுபீடசமான எதிர்காலம் மற்றும் நல்லாட்சி  ஆகியவற்றால் ஏமாற்றமடைந்தது மாத்திரமே மிகுதியானது என்றார்.

கொழும்பு கத்தோலிக்க பேராயர் இல்லத்தில் (2) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். “ அரசியல் பின்னணியை அடிப்படையாகக் கொண்ட ஒரு சூழ்ச்சியென முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா குறிப்பிட்டதன் உண்மை தன்மையை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

“ஏப்ரல்-21 குண்டுத்தாக்குதல் சம்பவம் குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளை துரிதப்படுத்தி  குற்றவாளிகளை சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்துவமாறு அரசாங்கத்துக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்” என்றார்.

“குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை மூன்று மாத காலத்திற்குள் சட்டத்தின் முன்னிலைப்படுத்துவதாக  குறிப்பிட்ட அரசாங்கம் குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம் பெற்று இரண்டு வருடங்கள் நிறைவடைந்தும் இதுவரையில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை” என்றார்.

ஆணைக்குழுவின் அறிக்கையின் உள்ளடக்கங்களை செயற்படுத்த  6 அமைச்சர்களை உள்ளடக்கிய குழுவை ஜனாதிபதி நியமித்தார். இவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், இவருக்கு எதிராக  சட்ட நடவடிக்கை எடுக்க கூடாது என்று  வலியுறுத்தும் 6 பேர் கொண்ட குழுவின் செயற்பாடுகளை கடுமையாக எதிர்த்தோம். இவ்வாறான செயற்பாடு ஜனாதிபதியின் ஒரு நாடு-ஒரு கொள்கை என்ற சட்டத்தை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது என்றார். ஏப்ரல்- 21 குண்டுத்தாக்குதல் விவகாரம் அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொண்டதையும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக்​கொள்வறத்காக, இடம் பெற்ற அரசியல் டீல் ஊடாக அறிந்துக் கொண்டோம் எனத் தெரிவித்த அவர், நல்லாட்சி மற்றும் சுபீட்சமான எதிர்காலம் ஆகிய சொற்பதங்களினால் ஏமாற்றமடைந்தது மாத்திரமேமிகுதியாகியுள்ளது என்றார்.

“ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் விவகாரம் குறித்து உண்மை தன்மையுடன் அரசாங்கம் செயற்பட வேண்டும்.  இல்லாவிடின் முன்னர் குறிப்பிட்டதை போன்று சர்வதேச அமைப்புக்களை நாட நேரிடும் இவ்வாறான செயற்பாடுகள் அரசாங்கத்திற்கு பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும்” என்றார்

4 comments:

  1. நாளை நான் இப்படி சொல்லவில்லைஎன்று இந்த ஆள் கூறுவார். இங்கு அரசாங்கத்தை விட இவருடைய கருத்துதான் அனைவருக்கும் ஏமாற்றம் தந்துகொண்டிருக்கின்றது

    ReplyDelete
  2. ayyo ranjith you are too late

    ReplyDelete
  3. உண்மை தெரியும் போல சூசகமாகச் சொல்லலாமே.

    ReplyDelete
  4. அரசாங்கமே அதை வைத்துக் கொண்டுடே உருவாக்க பட்டுள்ளது. இவர் வேற.

    ReplyDelete

Powered by Blogger.