Header Ads



கல்முனைக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதில் தாமதம் - ஹரீஸ், பைசல் காசிம் பிரதமரிடம் முறைப்பாடு


- அபு ஹின்சா -

அம்பாறை மாவட்ட கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிற்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தினை சுட்டிக்காட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச். எம்.எம். ஹரீஸ் மற்றும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் ஆகியோர் இன்று (8) பிரதமர் மகிந்த ராஜபக்ஸ அவர்களை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடினர்.

மேலும் இக்கலந்துரையாடலில் கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் இக்காலத்தில் 06 கொரோனா மரணங்களும் அதிகளவான தொற்றாளர்களும் இணங்காணப்பட்டு வருகின்றனர் எனவே இந்நிலையினை கருத்தில் கொண்டு கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிற்கான வக்சின் தடுப்பூசியை வழங்க விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமரைக் கேட்டுக் கொண்டனர்.

இந்த கோரிக்கையினை ஏற்ற பிரதமர் மஹிந்த ராஜபகச வக்சின் தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு ராஜாங்க அமைச்சர் சண்ன ஜயசுமனவுக்கு பணிப்புரை விடுத்தார். அதற்கமைய சண்ன ஜயசுமன சுகாதார துறை அதிகாரிகளினை உடனடியாக தொடர்பு கொண்டு கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்கான தடுப்பூசிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. பகுதி பகுதியாக எல்லா ஊர்களுக்கும் ஊசி போடுவார்கள்.

    நீங்கள் கட்சிகூட்டணி மாறி வாக்களித்தற்காக பேசிய பணம் எல்லாம் பெற்றுவிட்டீர்கள் என அறிந்தோம், மகிழ்ச்சி, சேவை தொடரட்டும்

    ReplyDelete

Powered by Blogger.