June 18, 2021

"தமது சம்பளத்தை பொது காரியங்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும்' என்ற தேரருக்கு மனோ கனேசனின் பதிலடி


எல்லே குணவன்ச தேரர், "பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தை பொது காரியங்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும்" என கூறுகிறார். 

நல்லது. ஆனால், உண்மையில் எனக்கு இந்த தேரர்  இதை போதிக்க  தேவையில்லை. 

1999 ம் ஆண்டிலிருந்து எனக்கு கிடைக்கும் சம்பளம், கொடுப்பனவுகள் எல்லாவற்றையும் நான் பொது காரியங்களுகாகவே அர்ப்பணித்துள்ளேன். 

அது மட்டுமல்ல, எனது சொந்த உழைப்பில் நான் சம்பாதித்த பல மில்லியன் பெறுமதியான சொத்துகளையும், பொது காரியங்களுகாகவே விற்று செலவழித்துக்கொண்டு இருக்கின்றேன். 

நான் ஒருபோதும் பொது சொத்தை திருடியது கிடையாது. ஏனெனில் எனக்கு திருட தெரியாது. 

இவைதான் என் தந்தை எனக்கு சொல்லித்தந்து விட்டு போன பாடங்கள். விட்டுத்தந்த மிகப்பெரிய சொத்துகள்.  என்  தந்தையைவிட, எனக்கு  பெரிய  புத்தர், காந்தி, ஏசு எவருமில்லை..! 

ஆனால், இந்நாட்டின் இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மத தலைவர்களை விட, விசேட அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ள இந்த தேரர் உட்பட மிகப்பல பெளத்த தேரர்களுக்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். 

இந்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த எல்லா அரசாங்கங்களும், உங்களை போன்ற தேரர்களை தம்வசம் வைத்துக்கொள்ள, வழங்கிய பென்ஸ், ரேஞ் ரோவர், டொயோடா போன்ற சொகுசு வாகனங்கள், சொகுசு வசிப்பிடங்கள் உட்பட்ட வசதிகளை, வரப்பிரசாதங்களை உடனடியாக நீங்கள் பொதுக்காரியங்களுக்காக வழங்கி இந்த பணியினை ஆரம்பித்து வையுங்கள்.  

கெளதம புத்தன் போதித்ததை போன்று, “கொலை இல்லை, திருட்டு இல்லை, பாலியல் உறவு இல்லை, பொய் இல்லை, போதைப்பொருள் இல்லை, மதிய உணவுக்குப் பிறகு சாப்பாடு இல்லை, நடனம், இசை இல்லை, நகைகள் ஒப்பனைப்பொருட்கள் இல்லை, எழுந்த படுக்கையில் தூக்கம் இல்லை, பணம் இல்லை” என்ற  பெளத்த துறவியின் எளிய துறவு வாழ்க்கையை வாழ உங்களால் முடியாவிட்டாலும் “பரவா-இல்லை”. 

தேரர்களாகிய நீங்கள், “இன-மதவாத அரசியல் இல்லை” என்று வாழ்ந்தாலே போதும்..! இந்நாடு உருப்படும்..! நாளாந்தம்  கொடுமைகளின்  மத்தியில்  வாழ்ந்துகொண்டிருக்கும் அப்பாவி தமிழ், முஸ்லிம் மற்றும் அப்பாவி ஏழை சிங்கள மக்களும் உங்களை வாழ்த்துவார்கள்..!

11 கருத்துரைகள்:

ஒரு அரசியள்வாதிக்கு திருட தெரியாது என்றதும் நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்...!

Good points Mr Mano mentioned.

Good, but insulting the thoughts of Buddha, Gandhi and Jesus is not welcomed.

Sandarppa vaatha terokkal..
Vidungayya...

மனோ கணேஷன் ஐயா பொல்லாத ஆள்தான்டா! இப்படித் துணிவாகப் பேசக்கூடிய தலைவர்கள் சிறுபான்மை மக்களிடையே இருப்பது மிகவும் அவதானத்திற்குரியது. ஆயினும் மனோ கணேஷன் ஐயா அவரகள் ஒரு மாபெரும் careless man. இவரை அறியாமலேயே மக்கள் இவரது உள்ளத்தைத் திருடி விட்டனர். இதுபோல் அவரும் மக்களின் உள்ளத்தைத் திருடிவிட்டார். உண்மையைத்தான் எழுதுகின்றேன்.

👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

Good advice for mongs of lanka.

@MR.Suhood MIY: நீங்கள் எப்பயாவது கருத்து சொல்லுவீங்க அதுவும் அரசுக்கு கூஜா தூக்குவதாக இருக்கும் விட்டால் எவனாவது கெடுக்குக்கேட்ட அரசியல் வாதிக்கு ஜால்ரா அடிச்சி சொம்பு தூக்குறதா இருக்கும் இவனே ஒரு பச்சை இனவாதி. அரச கரும மொழிகள் ,தேசிய நல்லினிக்க அமைச்சராக இருக்கும் போது அரபு மொழி இந்த நாட்டுக்கு தேவைல்லாத ஒன்னு என்று சொன்னவன் அந்த நேரம் நீங்க எதிர்ப்பு கருத்து தெரிவிக்க வில்லை ஏன் ? "கோமா" ல இருந்திங்க போல? இவன் ஒரு நோ 1 டுபாகூர். பெரிய புடுங்கி மாதுரி இவன் பேசுறானே இவன் தம்பி பிரபா கணேசன் கொழும்பில் தமிழ் பாடசாலை அபிவிருத்திக்கு கொடுத்த கோடிக்கணக்கான காசை அட்டையை போட்டான் அதில் இந்த நாதரிக்கும் பங்கு இவன் தந்தை ஒரு தமிழ் டைரக்டர் அதனால் இவனுக்கு நடிப்பு சொல்லி தர தேவை இல்லை! 1999 இல் இருந்து சம்பளம்,கொடுப்பனவுகளை பொது காரியங்களுக்கு அர்பணித்தானாம் புளுகு மூட்டை சமீபத்தில் கொழும்பு புறக்கோட்டையில் 10 மலையக இளைஞர்கள் பயண கட்டுப்பாட்டில் சிக்கி தவித்தார்கள் உன்ன உணவில்லாமல்,மாற்று உடை இல்லாமல்,தூங்க இடமில்லாமல் இந்த நாதாரி ஒரு மயிரும் பண்ணவில்லை இத்தனைக்கும் மலையகம் இவன் பிறந்த வளர்ந்த இடம், இவன் கட்சி அலுவலகம் 50 மீட்டர் தூரம். உங்களுக்கு இவனை பற்றி தெரியாவிட்டால் பொத்தி கொண்டு இருங்கள் கருத்து சொல்றேன் என்று காகா புடிக்க வேணாம். உங்களை போல் இத்துப்போன வெத்து பேப்பர்கல் தான் இவன மாதுரி இருக்கின்ற வீனா போனவனை ஜால்ரா அடிக்கிறது ! நீங்க இவனுக்கு இப்புடி சொம்பு தூக்குறதுக்கு பதிலா அவன் போட்டோவை உங்கள் வீட்டில் மாட்டி வைங்க! நான் பச்சை தமிழன் சோழ வம்சத்தில் வந்த இலங்கையன் என்று பீத்தினான் நாதாரி இவன் அப்பா திரு ஐயா v .p . கணேசன் அம்மா பெயர் : டயானா ருத் கணேசன்.

மனோ கணேசன் ஐயா அவர்கள் உண்மையிலேயே துணிச்சல் மிக்க ஒரு அரசியல் வாதிதான் ஐயா உங்களைப்போன்ற மற்றும் சாணக்கியன் இராச மாணிக்கம் போன்ற அரசியல் வாதிகள்தான் இந்த நாட்டின் மறுமலர்ச்சி சுபீட்ச்சம் இன மத வேறுபாடின்றி நாட்டை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்ல தகுதியான சிறந்த தலைவர்கள்

Post a Comment