Header Ads



டிராக்டர், கார்களை கடலில் போட்டதால் நல்ல வருமானம் கிடைக்கிறது - புகையிரதங்களை இறக்கவும் திட்டம், அமைச்சரவையும் பச்சைக்கொடி


இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிபிசி தமிழிடம் பேசுகையில், "கடல் வாழ் உயிரினங்களின் உற்பத்தியை அதிகரிக்க அமெரிக்கா, ஜப்பான், கனடா, இந்தியா உட்பட பல நாடுகளில் செயற்கை பவளப்பாறைகள் கடலில் போடப்படுகின்றன.

அந்த வகையில் தான் இலங்கை மீன்பிடி அமைச்சகம் சார்பில் இலங்கை கடற்பரப்பிற்குள் இவ்வாறு பேருந்துகளை இறக்கி வைத்து அதனை செயற்கை பவளப்பாறைகளாக மாற்றி வருகிறோம். இது தவறான செயல் ஒன்றும் இல்லை.

இலங்கையை பொறுத்தவரை இது புதிய முறையும் அல்ல, காரணம் மன்னார் பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் அவர்களுடைய பழைய பஸ், கார், டிராக்டர் போன்றவற்றை கடலில் போட்டு அதன் மூலம் கடல் வாழ் உயிரினங்களின் எண்ணக்கையை உயர்த்தி மீன்பிடி தொழில் செய்து நல்ல வருமானம் ஈட்டி வருகின்றனர்.

இந்த திட்டம் இலங்கை அரசின் முழு அனுமதியுடன் நடைபெற்று வருகிறது. முன்னதாக திரிகோணமலையில் இலங்கை அரசு போக்குவரத்துக் கழகத்தால் கைவிடப்பட்ட பேருந்துகள் கடலில் இறக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமில்லாமல் இலங்கை அமைச்சரவை கூட்டத்தில் இலங்கையில் கைவிடப்பட்ட ரயில்களை கொடுங்கள் நாங்கள் அதனை கடலில் இறக்கி பவளப்பாறைகளாக மாற்றுகிறோம் என கேட்டுள்ளேன். அதற்கு அமைச்சரவையில் நல்ல பதில் கிடைத்துள்ளது எனவே விரைவில் அதற்கான அனுமதியும் இலங்கை ரயில்வே துறையில் இருந்து வரும் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம்" என்று கூறுகிறார் டக்ளஸ் தேவானந்தா. BBC

No comments

Powered by Blogger.