Header Ads



மரக்கறிகளின் விலை வெகுவாக அதிகரிப்பு


சந்தையில் மரக்கறிகளின் விலை வெகுவாக அதிகரித்து காணப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் Hiru செய்தி சேவை முன்னெடுத்த தேடுதலின் அடிப்படையில் சில மரக்கறி வகைகள் கிலோ ஒன்று 200 முதல் 250 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றமை தெரியவந்துள்ளது.

பெரும்பாலான பகுதிகளில் சில்லறை விலைக்கு விற்பனை செய்யப்படும் போது 250 கிராம் மரக்கறி 80 முதல் 90 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

சகல பொருளாதார மத்திய நிலையங்களும் மொத்த விற்பனைகளுக்காக இன்று திறக்கப்பட்டுள்ளன.

அவை நாளைய தினமும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் போஞ்சி, கரட், லீக்ஸ், பீட் மற்றும் கோவா போன்ற மரக்கறிகள் ஒரு கிலோ கிராம் 200 முதல் 250 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதாக செய்தியாளர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.