Header Ads



நாட்டில் புதிய அதிவேக வீதி நிர்மாண, மேம்பால பணிகளும் பிரதமர் தலைமையில் இன்று ஆரம்பம்


புதிய களனி பாலத்தில் இருந்து அத்துருகிரிய வரையிலான புதிய அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகள் இன்று (07) ஆரம்பிக்கப்படுகின்றன.

இதன் அங்குரார்ப்பண வைபவம், பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் அலரி மாளிகையில் இருந்து Zoom தொழில்நுட்பத்தினூடாக முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, கொழும்பு மற்றும் கண்டி நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கிலான மேம்பாலம் அமைக்கும் பணியும் இன்று ஆரம்பிக்கப்படுகின்றது.

கொஹூவளை சந்தி, கெட்டம்பே சந்தி, கொம்பனித்தெரு ரயில் நிலையத்தினூடாக நீதியரசர் அக்பர் மாவத்தை மற்றும் உத்தரானந்த மாவத்தை பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது.

அத்துடன் பேர வாவி மற்றும் கொம்பனித்தெருவினூடாக பாலதக்‌ஷ மாவத்தை மற்றும் சிற்றம்பலம் ஏ கார்டினல் மாவத்தையை இணைக்கும் வகையிலும் மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது.

16.4 கிலோமீற்றர் தூரம் கொண்ட களனி பாலத்தில் இருந்து அத்துருகிரிய வரையிலான அதிவேக வீதியில் 04 சந்திகள் அமைக்கப்படவுள்ளன.

சைனா ஹாபர் பொறியியலாளர் சங்கத்தினால் அமைக்கப்படவுள்ள இந்த அதிவேக வீதிக்காக 134.9 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 217.30 மீற்றர் தூரமுடைய கொஹூவளை மேம்பாலம் ஹங்கேரி அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் அமைக்கப்படவுள்ளது.

இதற்காக 2648 மில்லியன் ரூபா நிதி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.