Header Ads



"எமது அரசாங்கத்தோடு கைகோர்க்க இன்றைய நாளில் அன்போடும், உரிமையோடும் அழைக்கின்றேன்"


தனி ஒருவருக்கு உணவு இல்லையெனின் இந்த பூலோகமே மனிதருக்கு தேவையில்லை என்றவாறு பாடினான் பாரதி. ஆனால் - ஒவ்வொரு நாளும் இந்த பூவுலகில், 69 கோடி மக்கள் பசித்த வயிற்றோடு இரவு படுக்கைக்குச் செல்கின்றார்கள் என்பது ஒரு கொடூரமான தரவு அல்லவா…?!

உணவு என்பது ஒவ்வொரு மனிதரதும் உரிமை.

அதிலும், குறிப்பாக, ஆரோக்கியமான, நச்சுத்தன்மையற்ற, பாதுகாப்பான உணவு என்பதே அந்த உரிமையின் உண்மையான அர்த்தம் என்பதோடு -

இந்த பூலோகத்தை அடுத்த உயிரினங்களோடு் பகிர்ந்து வாழ்கின்ற நாம் ஒவ்வொருவருமே, அடுத்தவர்களின் அந்த தூய உணவுக்கான உரிமையை மதிக்க வேண்டும்.

இன்று உலக உணவு பாதுகாப்பு நாள் -World Food Safety Day!

எனது நாட்டின் குடிமக்களுக்கான பாதுகாப்பான உணவு என்ற கொள்கையை இறுக்கமாக கடைப்பிடிக்கத் தீர்மானித்துருப்பதாலேயே - எவரது அல்லது எதனது அழுத்தத்திற்கும் விட்டுக்கொடுக்காமல் - எமது நாட்டின் விவசாயத்தைச் சேதனப் பசளைக்கு முழுமையாக மாற்றுவதில் நான் விடாப்பிடியாக நிற்கின்றேன்.

எத்தனையோ சவால்களை எதிர்கொண்டு எமது நாட்டின் விவசாயத்திலும், எமது மக்களின் உணவுப் பழக்கத்திலும் நாம் ஏற்படுத்துகின்ற இந்த புரட்சிகரமான மாற்றமானது - இலங்கையின் சரித்திரத்தில் தனித்துவமாக எழுதப்படும்.

உடல் ஆரோக்கியமும் மனச் செழுமையும் சிந்தனைப் பொலிவும் மிக்க சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் -

எமது அரசாங்கத்தோடு கைகோர்க்குமாறு எம் நாட்டு விவசாயப் பெருமக்கள் அனைவரையும், இன்றைய நாளில் நான் அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றேன்.

#கோட்டாபயராஜபக்‌ஷ #gotabayarajapaksa #GR

3 comments:

  1. உணவைப்பாதுகாப்பாக இந்த நாட்டு மக்களக்குக் கொடுக்க சீனாவின் நகரங்களின் அசுத்தங்கள் சேகரிக்கப்பட்டு அவற்றுக்கு யூரியா தௌிக்கப்பட்டு இலங்கைக்கு சேதனப் பசளை என்ற
    பெயரில் இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய நூற்றுக்கணக்கான கொள்கலன்கள் பீஜிங்கில் தயாராக வைக்கப்பட்டுள்ளன. அவற்றை இலங்கைக்கு இறக்குமதி செய்து சேதனப் பசளை என்ற பெயரில் எங்கள் விவசாயிகளுக்கு சீனாவின் அசுத்தம் பகிரப்படவிருக்கின்றது.அதற்கான சனாதிபதி ஆணைக்குழு ஏற்பாடுகளைப்பூர்த்தி செய்யவண்ணம் இருக்கின்றது. இன்னும் சில நாட்களில் சீனாவின் அசுத்தங்கள் இலங்கையின் விவசாய நிலங்களை அலங்கரிக்க இருக்கின்றன. அப்போது அப்பாவி இலங்கையர்கள் சோற்றுக்குப்பதில் மண்ணைத்தான் திண்ண வேண்டும்.அதற்கான காலம் மிக நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

    ReplyDelete
  2. your government is one of the curst one in sri lanka's life time, when you plot to win election with so many grave sin , we know that you and your followers will be most wanted people in front of justice,
    you will pay the price for your wrong by God,

    ReplyDelete

Powered by Blogger.