Header Ads



ராஜபக்ஷர்களுக்கு பாலும், தேனும் கொண்டு வரவே அதிவேக நெடுஞ்சாலை கட்டப்பட்டதாக எதிர்க்கட்சி கூறியது


புதிய களனி பாலம் முதல் அத்துருகிரிய வரையான 16.4 கிலோமீற்றர் நீளமான அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கெடம்பே, கொஹுவல, கொம்பனித்தெருவில் நீதிபதி அக்பர் மாவத்தை மற்றும் உத்தரானந்த மாவத்தை, பாலதக்ஷ மாவத்தை மற்றும் சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை ஆகிய இடங்களில் நிர்மாணிக்கப்படும் 06 மேம்பாலங்களின் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆற்றிய உரை,


ஆளுநர் பார்ன்ஸ் அவர்களின் பின்னர் இந்நாட்டில் நெடுஞ்சாலை புரட்சி ஏற்படின் அது பிரதமர் அவர்களே, அது நீங்கள் ஜனாதிபதியாக சேவையாற்றிய காலத்திலேயே ஆகும். நீங்களே கொழும்புக்கு மாத்திரம் மட்டுப்பட்டிருந்த கார்பட் வீதிகளை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்று சேர்த்து 12000 கிலோமீற்றர், 13000 கிலோமீற்றர் வரை யுத்தம் இடம்பெறும் போதே இந்நாட்டின் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்த தலைவர்.

அதிவேக நெடுஞ்சாலை கலாசாரத்தை ஏற்படுத்திய, அறிமுகப்படுத்திய தலைவர் நீங்களே. நீங்கள் 2015 இல் தோல்வியடையாது இருந்திருப்பின் இந்த நெடுஞ்சாலைகள் அனைத்தும் அமைக்கப்பட்டு, இந்த மேம்பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டு பாரிய அபிவிருத்தியை ஏற்படுத்தியிருக்க முடியும்.

கொவிட் தொற்று நிலைமையின்போது அந்த சவால்களுக்கு முகங்கொடுத்து இந்நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த, நாட்டின் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்ய மிகுந்த அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் ஜனாதிபதி அவர்களை இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூருகின்றேன். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு உங்களது மஹிந்த சிந்தனையில் காணப்பட்ட  வேலைத்திட்டங்களை அதேபோன்று புதுப்பிக்கப்பட்ட வேலைத்திட்டம் சுபீட்சத்தின் நோக்கில் உள்ளடங்கியுள்ளது.

 பிரதமர் அவர்களே, இந்த திட்டம் அமைச்சரவையின் அனுமதிக்கப்பட்ட பின்னர் வீதிகள் சீனர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுவிட்டது என எதிர்க்கட்சி கூறியது. அன்று நீங்கள் இந்த துறைமுக நகருக்கு அடிக்கல் நாட்டிய போது அன்றும் முழு நிலமும் சீனர்களுக்கு வழங்கப்பட்டு விட்டதாக கூறப்பட்டது.

ஆனால்; நீங்கள் அவ்வாறு செய்யவில்லை. மிகச் சிறந்த நிர்வாகத்துடன் பொருளாதாரத்தை வழிநடத்தி, இந்த நாட்டின் எதிர்காலத்திற்கான உட்கட்டமைப்பை உருவாக்கிய தலைவர் நீங்கள். இந்த நாட்டின் வளங்களை விற்ற ஒரு தலைவராக நீங்கள் இருந்ததில்லை.

ஆனால், உங்களுக்கு சேறு பூசிய எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்து, நீங்கள் மிகவும் அன்புடன் கட்டிய ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கியது. நீங்கள் இருந்திருந்தால் அது ஒருபோதும் நடந்திருக்காது என்பது எங்களுக்கு தெரியும்.

அதனால் இன்றும் அவர்கள் சேறு பூசும் செயற்பாட்டைளே மேற்கொண்டு வருகின்றனர். நீங்கள் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிக்கும்போது, ராஜபக்ஷர்களுக்கு பால் மற்றும் தேனை கொண்டு வருவதற்காகவே அதிவேக நெடுஞ்சாலை கட்டப்பட்டதாக கூறினார்கள்.

இந்த திட்டம் தொடங்கப்பட்டபோது அது சீனர்களுக்கு வழங்கப்பட்டது என்று கூறப்பட்டது. முடிந்தவரை சேறு பூசவே முயற்சிக்கின்றனர்.

அன்று 2015 இற்கு முன்னர் நீங்கள் அவமதிக்கப்பட்டு, உங்கள் குடும்பம் அவமதிக்கப்பட்டு, அவர்கள் அரச அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் உங்களிடமும் உங்கள் குடும்பத்தினரிடமும் பழிவாங்கிய விதத்தை புதிதாக கூறவேண்டியதில்லை. பழிவாங்கல், வளங்களை விற்பனை செய்ததை தவிர அவர்கள் இந்நாட்டிற்காக செய்தது ஒன்றும் இல்லை.

ஆனால் அதன் பின்னர் நல்லாட்சி அரசாங்கம் 5 ஆண்டுகளில் நாட்டை ஒரு தரிசு நிலமாக மாற்றியது. 

ஆனால் யுத்தம் நிறைவடைந்த பின்னர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களில் காலப்பகுதியில் உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் உள்ள சாலை அமைப்புக்கு சமானமான சாலை அமைப்பை இலங்கையில் நிர்மாணிக்க முடிந்தது. அதிவேக நெடுஞ்சாலை மாத்திரமன்றி அனைத்து சாலைகளும் கார்பட் அல்லது கொங்கிரீட் செய்வது வரை அபிவிருத்தி செய்யப்பட்டது.

No comments

Powered by Blogger.