Header Ads



ஆளும் கட்சியின் பங்காளிகள், வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை


எரிபொருள்களின் விலையேற்றத்தை கடுமையாக கண்டித்துள்ள ஆளும் கட்சியின் பங்காளிகள் கட்சிகள் சில, ​நாடும் மக்களும் நெருக்கடிக்குள் முகங்கொடுத்து கொண்டிருக்கும் நிலையில், “பிரபல்யமாகாத தீர்மானங்களை” தீர்மானங்களையும் எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

எரிபொருள் விலையேற்றத்தை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவின் தோளில் மீது சுமத்துவதை கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ வித்தாரண மற்றும் எம்.பிக்களான அத்துரலிய ரத்ன தேரர், ஏ.எல்.எம். அத்தாவுல்லா, முன்னாள் எம்.பியான டிரான் அலஸ், மற்றும் ஜி. வீரசிங்க (ஸ்ரீ லங்கா கொமினியூஸ்ட் கட்சி), அசங்க நவரத்ன ( ஸ்ரீ லங்கா மஹஜன கட்சி) ஆகியோர் கையொப்பமிட்டு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலே​யே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.


 

No comments

Powered by Blogger.