Header Ads



அமெரிக்காவில் இருந்து வந்த விமானம் - அந்நாட்டு மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் எமது நன்றிகள் - ஜனாதிபதி கோட்டாபய



கோவிட் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த இலங்கை மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கான ஒரு பங்களிப்பாக, 
முன்னணிச் சுகாதாரப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களாகவும், கோவிட் நோயாளிகளுக்கான சிகிச்சைக் கருவிகள் மற்றும் மருத்துவப் பொருட்களாகவும் - அமெரிக்க மக்களால் வழங்கப்பட்ட 120 கோடி ரூபாய்கள் பெறுமதியான அன்பளிப்பு இன்று இலங்கை வந்து சேர்ந்தது.

காலத்தின் தேவையறிந்து எமக்கு உதவுகின்ற அமெரிக்க அரசாங்கத்திற்கும், அமெரிக்க மக்களுக்கும் - இலங்கை மக்களின் சார்பாக எனது மனமார்ந்த நன்றிகள்

உரிய பொழுதில் இந்த உதவி வந்து சேருவதை அனுசரணை செய்த அமெரிக்க தூதுவராலயத்திற்கும் (U.S. Embassy Colombo, Sri Lanka),  உதவியை கொண்டு வந்து சேர்த்த, அமெரிக்க அரச உதவி நிறுவனமான  USAID Sri Lanka விற்கும் எமது நன்றிகள்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ 

ஐக்கிய அமெரிக்காவில் இருந்து கொவிட் 19 தடுப்பு மருந்துகளுடான விமானம் ஒன்று இன்று (05) காலை இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  கொவிட் 19 நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இலங்கைக்கு அவசரகால மருத்துவப் பொருட்களை வழங்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது. 

விஷேட விமானம் ஒன்றின் 6 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

அதன்படி, இலங்கையில் சுகாதாரத் துறைக்கு 880,000 பாதுகாப்பு ஆடைகளை அமெரிக்கா வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  இதய துடிப்பை அளவிட 1,200 Oximeters வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

2 comments:

  1. ஊருக்காரருக்கு ஊர் சரியான நேரத்தில் உதவிசெய்வதாகத் தெரிகிறது.

    ReplyDelete
  2. ஊருக்காரருக்கு ஊர் சரியான நேரத்தில் உதவிசெய்வதாகத் தெரிகிறது.

    ReplyDelete

Powered by Blogger.