Header Ads



750 பிரான்ஸ் கடற்படையினர் இலங்கை வருகை - தேசிய பூங்காங்களை பார்வையிட அனுமதி


இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரான்சின் கடற்படை குழுவொன்றிற்கு இலங்கையின் தேசிய பூங்காங்களிற்கு விஜயம் மேற்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜூன் ஏழாம் திகதி இலங்கை வரவுள்ள பிரான்சின் கடற்படை குழுவினருக்கே  தேசிய பூங்காங்களிற்கு செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர்.

பயோ சேவ்டி பபிளின் கீழ் இரண்டு கப்பல்களில் 750 கடற்படையினர் இலங்கை வரவுள்ளனர்.

அவர்கள் இலங்கையின் தேசிய பூங்காங்களிற்கு விஜயம் மேற்கொள்வதற்கான வேண்டுகோளை விடுத்துள்ளதை தொடர்ந்து அவர்களிற்கு அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் நடவடிக்கைகளில் கடற்படையினரும்  சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினரும் ஈடுபடவுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சு பாதுகாப்பு அமைச்சு கடற்படையுடன் இணைந்து பிரான்ஸ் கடற்படையின் விஜயத்திற்கான ஏற்பாடுகளை செய்யவுள்ளன.

வெளிவிவகார அமைச்சு இலங்கை கடற்படையினர் இலங்கையின் சில பகுதிகளிற்கு சுற்றுலா செல்வதற்கு உதவும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரான்ஸ் தூதரகத்தின் வேண்டுகோளை தொடர்ந்தே இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments

Powered by Blogger.