Header Ads



மூன்றரை மாதங்களில் ஆன்லைன் பாடங்களில் 600 சான்றிதழ்கள் பெற்று முஹம்மது ஹுபைப் சாதனை


கடந்த மூன்றரை மாதம் லாக் டவுன் காலத்தை பயனுள்ள வகையில் செலவழித்த முஹம்மது ஹுபைப் ஆன்லைன் பாடங்களில் சேர்ந்து பயின்று 600 சான்றிதழ்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்...

மலப்புறம் மாவட்டத்தில் புத்தனத்தாணி அருகில் கல்லிங்கலைச் சேர்ந்த முஹம்மது ஹுபைப், மலப்புறம் மஅதின் அகாடமி தக்வா கல்லூரி முதல் ஆண்டு மாணவர்..

தற்போது கோவிட் கால ஊரடங்கால் கல்லூரி பாடங்கள் ஆன்லைன் மூலம் நடந்த வருகிறது..

கூடவே மீதமுள்ள நேரங்களில் வெவ்வேறு கல்வி நிறுவனங்களின் டிஜிட்டல் மார்க்கெட்டிங், அக்கவுன்டன்சி, இகணாமிக்ஸ், மேனேஜ்மென்ட் மற்றும் டிசைனிங் பாடங்களுக்கான  குறுகிய கால ஆன்லைன் கோர்ஸுகளில் சேர்ந்து படித்தார்..

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 200 சான்றிதழுடன், ஐ.நா கல்விப் பிரிவு, கூகுள், கலிபோர்னியா பல்கலைக்கழகம், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட புகழ்பெற்ற நிறுவனங்களின் ஆன்லைன் வகுப்புகளில் சேர்ந்து மூன்றரை மாதத்தில் சுமார் 600க்கும் அதிகமான கோர்ஸுகள் தேர்ச்சி பெற்ற முஹம்மது ஹுபைப் கைநிறைய சான்றிதழ்களுடன் காட்சி தருகிறார்..

Colachel Azheem

2 comments:

  1. வாழ்துக்கள். நல்ல முயற்சி. தொடர்பு கொள்ள வழி செய்வீங்களா?

    ReplyDelete

Powered by Blogger.