Header Ads



ஜூலை 5 க்குப் பிறகு ஞானசாரரை பாராளுமன்றத்தில் காணலாமா..?


அபே ஜனபல கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்  நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான அத்துரலியே ரத்தின தேரர் இராஜினாமா செய்த பின்னர், அவரின் வெற்றிடத்துக்கு  ஞானசார தேரர் பாராளுமன்றம் செல்லவுள்ளதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் பின்னர் தேசியப்பட்டியல் ஆசனம் தொடர்பில் அக்கட்சியில் முரண்பாடு ஏற்பட்ட நிலையில், அத்துரலியே ரத்தின தேரர் 6 மாதங்களுக்கு பாராளுமன்றம் செல்வதற்கு இணக்கம் காணப்பட்டது.

அவருக்கு வழங்கப்பட்ட 6 மாத காலம் எதிர்வரும் ஜூலை மாதம் 5 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக  அபே ஜனபல கட்சி தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, தேசியப் பட்டியில் பாராளுமன்ற உறுப்பினராக ஞானசார தேரரின் பெயரை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தவல்கள் வெளியாகியுள்ளன.

1 comment:

  1. சமூகத்தில் நல்லிணக்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த பாராளுமன்றத்தில் பிரதிநிதிகள் இல்லை, ஆனால் இனத்துவேசம், இனவெறியை பிரதிநிதித்துவப்படுத்த அங்கத்தவர்கள் பாராளுமன்றம் நுழையும் உலகில் உள்ள ஒரே நாடு இலங்கை. அந்த பெருமை இலங்கைக்குக் கிடைக்கின்றது.

    ReplyDelete

Powered by Blogger.